பாடசாலை மாணவிகளை சீரழிக்கும் அதிபர்கள்

யாழ் மாவட்ட பாடசாலை அதிபர்கள் சிலருக்கு மனநோய் ஏற்பட்டதன் விளைவாக விசித்திரமான நடைமுறைகளை பாடசாலைகளில் பின்பற்ற முனைகின்றனர்.

மாணவிகளை கை இல்லாத சட்டை போடுமாறு வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக தரம் 5 க்கு உட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கே இவ் விசித்திரமான நோய் தொற்றி வருகின்றது.

கையில்லாத சட்டை போடுவதால் பல சமூக சீர்கேடுகள் ஏற்படும் என்பதால் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கையில்லாத பாடசாலை சீருடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது 8, 9, 10 வயது பிள்ளைகள் கூட உடல் தோற்றத்தில் பெரிய பிள்ளைகள் போல காணப்படுகின்றனர். தற்போதைய உணவு பழக்கங்கள் காரணமாக பெண் பிள்ளைகள் பூப்படையும் வயது கூட 10 , 11 வயதுகளில்  ஏற்பட்டு வருகின்றது.

எனவே பெண் மாணவிகளுக்கு கையில்லாத சட்டை போடும் நடைமுறை உள்ள பாடசாலைகள் உடனடியாக தமது நடைமுறையை மாற்ற வேண்டும்.

பாடசாலை சீருடைக்கு என்று ஓர் ஒழுங்கு உள்ளது. இருப்பதை விட ஆடையை குறைப்பு செய்வது ஏற்புடையதல்ல.

கையில்லாத சட்டை ஏன் தேவை என்பதற்கு பொருத்தமான காரண காரிய விளக்கத்தை குறித்த அதிபர்கள் தெளிவுபடுத்த வேண்டும்? ???

காரணம் இல்லாமல் ஒரு விடயத்தை செய்ய முனைவது பைத்தியகாரதனம்.

வட மாகாண கல்வி பணிப்பாளர் கையில்லாத சட்டை தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த  வருடம்  யாழ்  மாவட்ட  சில பாடசாலைகளில்  ,பாடசாலை நேரத்தில் , பாடசாலை ஆசிரியர்களால் மாணவிகள் மீது பாலியல்  ரீதியாக  துஸ்பிரயோகங்கள் நடைபெற்று , குறித்த  வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில்  உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*