தீவக ஆசிரியர்களின் மாதவிடாய் கழிவுகளை மாணவிகளை கொண்டு அகற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்

யாழ்ப்பாண மாவட்டம் பின்வரும் 5 கல்வி வலயங்களை கொண்டது.

1. யாழ்ப்பாண வலயம்.
2.தென்மராட்சி வலயம்
3.வடமராட்சி வலயம்
4.வலிகாமம் வலயம்
5.தீவக வலயம்

இவற்றுள் மிகவும் வறுமையான மாணவர்களை கொண்ட வசதிகள் குறைந்த பாடசாலைகள் காணப்படுவது தீவக வலயத்தில் ஆகும்.

தீவக பாடசாலைகள் பலவற்றில் மாணவர்களை கொண்டு பாடசாலை நேரத்தில் மலசலகூடங்களை வலுக்கட்டாயமாக கழுவிவிப்பது இடம்பெற்று வருகின்றது.

அதிபர் ஆசிரியர்கள் பயன்படுத்தும் மலசல கூடங்களை கூட மாணவர்கள் கழுவி சுத்தம் செய்ய பணிக்கப்படுவதாக பெற்றார் கவலை தெரிவிக்கின்றனர்.

அதைவிட  கொடுமை மலசல கூட குழிகளுக்குள் மாதவிடாய் சுகாதார துணிகள் ஆசிரியர்களால் இடப்படுவதால் அதனை அகற்ற மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

சில பாடசாலைகளில் மாணவர்கள் பயன்படுத்தும்  மலசலகூடங்களை மாணவர்களை பயன்படுத்த விடாது அதிபர் ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆசிரியர்கள் குண்டி கழுவுவதற்கான நீரை மாணவர்கள் தூர இடத்தில் இருந்து வாளியில் அள்ளி கொண்டு வந்து வைக்க பணிக்கப்படுவதாக அறிய முடிகிறது.

இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளால் ஏற்கனவே வறுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

தீவக வலயக் கல்வி பணிப்பாளரின் அடிவருடி அதிபர் ஆசிரியர்களாலேயே  மாணவர்களை கொண்டு மலசலகூடங்களை கழுவுதல், ஆசிரியர்கள் குண்டி கழுவ நீர் அள்ளி வைத்தல் போன்ற ஆண்டான் அடிமை செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

சிறுவர் உரிமை அரச அதிகாரிகள் தெரிந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என பாதிக்கப்பட்ட பெற்றார் தெரிவிக்கின்றனர்.

0213212374 தீவக வலய தொலைபேசி இலக்கத்திற்கு இவ் செய்தியை படிக்கும் எவரும் அழைப்பை ஏற்படுத்தி கொடுக்கும்  அழுத்தம் மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்க உதவும்.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*