இழஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு 08 மதங்களாக குப்பைக்குள் வீசப்பட்டுள்ளது

வேட்பாளர்களுக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட நபர்களின் இரண்டு வழக்குகளையும் 3 மாத காலத்தில் முடிவுறுத்துமாறு சாவகச்சேரி மஜிஸ்ரேட் நீதிமன்றத்திற்கும் யாழ். மாவட்ட நீதமன்ற நீதிபதி இளஞ்செழியன் 2016ம் ஆண்டு யூலை மாதம் 26ம் திகதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

யாழ். மாவட்ட நீதமன்ற உத்தரவை அமுல்படுத்த முடியாத நிலையில் சாவகச்சேரி மஜிஸ்ரேட் நீதிமன்றத்திறம் இருக்கும்போது யாழ். மாவட்ட நீதமன்ற தீர்ப்பை மக்களும் பொலிசாரும் ஏனய நீதிமண்றங்களும் எவ்வாறு அமுல்படுத்துவார்கள் என்ற பலமான விமர்சனம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

துமிந்த சில்வா பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது துப்பாக்கி கலாச்சாரத்தை கையில் எடுத்தமைக்காக நீதிமண்றால் தண்டிக்கபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். பல பிரதி பொலிஸ் மா அதிபர்கள்கூட நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள நிலையில் யாழ் நீதவான்களும் நீதிபதிகளும் அரசியல் என்ற சாக்கடைக்குள் நீந்தகின்றார்கள் என்ற பலமான குற்றச்சாட்டு யாழ் குடாநாட்டிலும் தென்இலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும் எழுந்துள்ளது.

துப்பாக்கியுடன் நடமாடும் அரசியல்வாதிகளுக்கு பிணை வழங்குவதில் கடினமான போக்கை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும் என யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை 06 மாதங்களுக்கு முதல் கொடுத்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மாகாணசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில், அப்போதைய வேட்பாளராகிய குமாரு சர்வானந்தனுக்கு நீதிபதி இளஞ்செழியனால் பிணை வழங்கப்பட்டது.

இதன்போதே அரசியல்வாதிகள் மத்தியில் துப்பாக்கிக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் சந்தேக நபரான குமாரு சவர்வானந்தன் கடந்த 2016 மார்ச் மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நான்கு மாதங்களாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் இருந்துவந்தார்.

இவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை, விசாரணை செய்த நீதிபதி இளஞ்செழியன் நிபந்தனைகளின் அடிப்படையில் சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்தார்.

துப்பாக்கியுடன் நடமாடும் அரசியல்வாதிகளுக்கு பிணை வழங்குவதில் கடினமான போக்கை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது, மக்கள் முன்னிலையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இலகுவில் பிணை வழங்கப்படக்கூடாது. தேர்தல் காலத்தில மக்கள் மத்தியில் ஜனநாயகம் பேசிக்கொண்டு, மோதல்களில் ஈடுபட்டு, துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு பிணை வழங்கக் கூடாது. ஜனநாயகம் என்ற போர்வையில் யாழ் குடாநாட்டில் துப்பாக்கிக் கலாசாரத்தை இனிவரும் காலங்களில் அனுமதிக்க முடியாது. கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவடைந்ததன் பின்னர் 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. போர் முடிவடைந்ததன் பின்னர் அரசியல்வாதிகள் தங்களுடைய பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கான தேவையுமில்லை. அப்படிப்பட்டவர்கள் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால், அவர்களுக்குப் பிணை வழங்கக் கூடாது. ஆயினும் இந்த வழக்கில் வேட்பாளர்களுக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட இரு வேட்பாளர்கள் குழுக்களில் ஒன்றாகிய மற்றைய குழுவின் நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிணை வழங்கியள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, தீர்ப்புக்கள் இயலுமானவரை சமத்துவமாகப் பேணப்பட வேண்டும். இரண்டு தரப்பினருக்கிடையே பாரபட்சம் இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் நிபந்தனைகளுடன் சந்தேக நபரைப் பிணையில் செல்ல இந்த நீதிமன்றம் அனுமதிக்கின்றது)

இதேவேளை, ஐம்பதாயிரம் ரொக்கப் பிணையுடன், 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட குமாரு சவர்வானந்தன், மாதத்தில் ஒரு தடவை நீதவான் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் சந்தேக நபர் கையொப்பம் இட வேண்டும் என்றும் நீதவானினால் உத்தரவிடப்பட்டது.

எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது எனவும் சாட்சிகளுடன் எந்தவிதத் தலையீடும் இருக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை கொடுத்தார்.

அவ்வாறு தலையீடு இருப்பின் பிணை இரத்துச் செய்யப்பட்டு, சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதவானினால் உத்தரவிடப்பட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வேட்பளார்களுக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட நபர்களின் இரண்டு வழக்குகளையும் 3 மாத காலத்தில் முடிவுறுத்துமாறு சாவகச்சேரி நீதிமன்றத்திற்கும் நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்தார் ஆனால் இந்த உத்தரவு மீறபட்டுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*