யாழில் தொண்டர் ஆசிரியர்கள் அதிபரானதன் விபரீதம்

வட மாகாணத்தில் கல்வி இன்று பின்னடைந்து செல்வதற்கு பிரதான காரணம்  வடமாகாண கல்வி அமைச்சின் நிர்வாக நடவடிக்கை ஆகும்.

இலங்கையில் வட மாகாணத்தில் மட்டுமே படிப்பறிவற்ற 8 ம் வகுப்பு படித்த பல மடையர்கள் அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர்.

அரச பாடசாலைகளில் ஆசிரியராக நியமனம் பெற வேண்டுமெனில் அடிப்படை தகுதி பல்கலைக்கழக பட்டம் அல்லது கல்வியல் கல்லூரி பட்டம் ஆகும்.

எனினும் யாழ் மாவட்ட ஆசிரியர்கள் பாதி பேர் அடிப்படை கல்வி தகுதி இல்லாதவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தி ஆகும்.

என்னதான் தொழில் அனுபவம் இருந்தாலும் தொழில்வாண்மை ரீதியாக அடிப்படை தகுதி இல்லாதவர்களை அரச தொழிலில்  அமர்த்துவது சட்டவிரோதமானது.

ஊசி போட தெரிந்தவர்களை வைத்திய தொழிலில் அமர்த்துவது போன்றது, தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது ஆகும்.

இதில் என்ன கொடுமை எனில் வட மாகாண கல்வி அமைச்சர், செயலாளர், கல்வி பணிப்பாளர், அதிபர்களின் உறவினர்களுக்கே தொண்டர் ஆசிரியர் நிரந்தர நியமனம் வட மாகாண கல்வி அமைச்சால் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்கு எதிராக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போர் கொடி தூக்கி உள்ளனர். வருகின்ற வாரங்களில் மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர்.

இவ்வாறு கடந்த காலத்தில் ஆசிரியராகி பின்பு சேவை மூப்பில் அதிபரான  யா/ வடலியடைப்பு சைவபிரகாச வித்தியாலய முன்னாள் அதிபர் , தற்போது கல்வி நிர்வாக பரீட்சை சித்தியடைந்து அதிபர் நியமனம் பெற்றவருக்கு பதவி ஆசை காரணமாக கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அதிபர் ஆசிரியர்கள்  வன்முறையாளர்களாக மாறிவருவது மாணவர்களை தவறான முன்மாதிரிகளை பின்பற்ற தூண்டும் .

 

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*