சமாதான நீதவான்களாக கிராம சேவகர்கள்,,,,,,,,லஞ்சம் வாங்க புதிய பதவி

கிராம உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பதவி காலம் வரை வலுவில் இருக்கும் வகையில் சமாதான நீதவான் பதவியை நீதி அமைச்சு வழங்கி உள்ளது.

சமாதான நீதவான்களாக சேவை புரிபவர்கள் எவரும் மக்களிடம் பணம் அன்பளிப்புக்களையோ  பெற முடியாது.

மாறாக கடிதங்களை ஆவணங்களை உறுதிப்படுத்த யாராவது பணம் கேட்பார்கள் எனின் நீதி அமைச்சுக்கு அறிவித்தால் பதவி பறிக்கப்படும் என்பதை சாதாரண மக்கள் தெரிந்திருக்க வேண்டும்.

  1. கிராம சேவகர்கள் சிலர் சாதாரணமாகவே மக்களிடம் லஞ்சம் வாங்குவது தொடர்பில் பல முறைப்பாடுகள் தொடர்பில் ஆதாரங்களை எமது புலனாய்வு செய்தியாளர்கள் திரட்டி  வருகின்றனர்.

சமாதான நீதவான் கவனிக்க வேண்டிய விடயங்கள்.

01. தாங்கள் கடமைபுரியும் நியாயாதிக்கத்தினை அறிந்து கொண்டு அதனுள் செயற்படல்.

02. அரசாங்க இலச்சினையை தமது அலுவலக இலச்சினையில் , கடித தலைப்புக்களில் பயன் படுத்தாமை.

03. மக்களின் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தும்போது விழிப்புணர்வுடன் இருத்தல் மற்றும் அத்தாட்சிப்படுத்துகையானது சம்பந்தப்பட்ட ஆளின் முன்னிலையில் அமைந்து காணப்பட வேண்டும்.

04. கடமை நிமிர்த்தம் கட்டணங்களை அறவிடலாகாது என்பதுடன் சன்மானங்களையும் அன்பளிப்புக்களையும் கடமை நிமிர்த்தம் பெற முடியாது.

05. தமது அணைத்துக் கடமைகளின் போதும் அலுவலக இலச்சினையை உபயோகிக்க வேண்டும் என்பதுடன் பதிவு இலக்கத்தினையும் குறிப்பிடல் வேண்டும்.

06. தனது தனிநபர் நடத்தையில் அக்கறையுடன் இருக்க வேண்டும்.

07. சமூகத்தில் முன்மாதிரியாக இருப்பதுடன் தனது பதவியின் கௌரவத்தினை பேணும் வகையில் காணப்படல்.

08. தமது சேவையை நாடி வருபவர்களிடம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளல்.

09. சமுதாய சட்ட விரோத செயல்களில் ஈடுபடல் மற்றும் துணைபோதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்தலும் இவ்வாறான சட்ட விரோத செயல்களைத் தடுக்க ஏனைய ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கல்.

10. சட்டத்தை அமுல் படுத்தும் பொலீஸ்ää நீதிமன்றம் போன்றவற்றின் தொழிற்பாட்டினை இலகுபடுத்த துணையாக இருத்தல்.

11. தங்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணம் தொடர்பில் பொறுப்பு கூறுபவராக இருத்தல்.

12. பதவி இலச்சினையை தனிப்பட்ட கடிதங்களுக்கு பாவிக்கக் கூடாது. உடமை சம்பந்தப்பட்ட ஆவணங்களில் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*