கேக்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடும் ஏரோபிலேன் ஓட்டும்

இது ஒட்டுமொத்தமாக இலங்கையைச் சர்வதேசத்திடம் காட்டி கொடுத்த நீதிமண்ற வளக்கு.

கடந்த 35 வருடமாக 15 தமிழர்கள் ஜரோப்பிய நாடுகளில் இலங்கை பொலிசார் ஆண் உறுப்பைக் குறட்டால் நசுக்கினர்,  காலை கையைச் சேத்து வைச்சு கட்டி மேசையில் போட்டு அடித்தனர்,  ஆணியால் காலில் அறைந்தனர்,  அதில் மின்சாரம் பாச்சினர் ,  சிங்களவன் சிகரட்டால் சுட்டான் என்றும் அல்லது சிங்கள பொலிஸ்காறன் பெண் உறுப்பை நாசமாக்கினான் என்றும் 15 இலட்சம் தமிழர்களும் புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து கோரும்போது இலங்கை அரசுக்கு எதிராகவும் இலங்கை பொலிசாருக்கும் முப்படையினருக்கும் எதிராகவும் வாக்குமூலம் 15 இலட்சம் கொடுத்துள்ளனர்.

இது எல்லாம் பொய் , இப்படி எல்லாம் இலங்கையில் பொலிசார் செய்வது இல்லை,  என்று இலங்கை அரசு தனது 120 நாட்டு தூதுவரகத்தின் ஊடாக உலக நாடுகளுக்குச் சொல்லிவருகின்ற நிலையில் ஜ.நா மனித உரிமை கவுன்சில் , சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட உலகத்தில் கடந்த 35 வருடமாக இவை எல்லாம் அகதி அந்தஸ்து பெறுவதற்குத் தமிழர் சொல்லும் பொய்கள் என்று இலங்கை அரசு கூறிவருகின்ற நிலையில் இலங்கை பொலிசாரே இலங்கை பொலிசாருக்கு எதிராக இப்படி எல்லாம் இலங்கை பொலிசில் நடக்கிறது என்றும் இப்படி எல்லாம் இலங்கை பொலிசார் செய்கின்றனர் என்றும் 15 இலட்சம் தமிழர்கள் சொன்ன விடயங்கள் அனைத்தும் உண்மை என்று ஒப்பிக்கும் விதத்தில் சுண்ணாகம் பொலிஸ் நிலைய வளக்கை யாழ் நீதிமண்றில் நகர்த்தி வருகின்றார்கள்.

இந்த வளக்கின் ஊடாக இலங்கை தமிழர் 15 இலட்சம்பேரும் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகளில் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மை என்று ஏற்றுக்கொள்ளபட்டு 15 இலட்சம் முறைபாடுகளும் 15 இலட்சம் போர்குற்றமாக இலங்கை அரசுக்கு எதிராகத் திரும்பும்.

அதன் ஊடாக இலங்கை அரசு மீது வைக்கபட்ட 15 இலட்சம் குற்றச்சாட்டுகளும் உண்மையானவை என்று உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும்.

இதன் ஊடாக உலக நாடுகள் சர்வதேச போர்குற்ற நீதிமண்றத்தை ஜ.நா பாதுகாப்புக் கவுன்சில் உதவியுடன் நிறுவி அகதி விண்ணப்பத்தில் சொல்லபட்ட அனைத்து விடயங்களையும் போர்குற்ற சாட்சிகளாகப் பயன்படுத்த ஆரம்பிக்கும்.

அதற்குச் சுண்ணாகம் பொலிஸ் கேஸ் ஒரு ஆதாரமாக அமைய உள்ளது.

மொத்தத்தில் இலங்கை அரசு ஜ.நா மனிதஉரிமை கவுன்சிலுக்குச் சென்று சொன்ன அனைத்தும் சுண்ணாகம் பொலிஸ் விடயத்தில் போய்யாக மறி ஒட்டு மொத்த இலங்கை தீவையும் இலங்கையில் இருக்கும் 95 ஆயிரம் பொலிசாரையும் இலங்கை சி.ஜ.டி பணிப்பாளரும் தேசிய புலனாய்வு பணிப்பாளரும் காட்டி கொடுத்துள்ள நிலை உருவாகும்.

Read this case news ………

முழங்காலில் இருத்தி , இரு கைகளையும் கால்களுடன் இணைத்து கட்டி , இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி தூக்கி உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள். இழஞ்செளியனையும் உலகத்தின் விசாரனையாளர்களையும் முட்டாக்கும் ஒரு வளக்கு யாழ் நீதிமண்றில் நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை என யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர். இதனை வாசிக்கும் ஒருவருக்கு கேக்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடும் ஏரோபிலேன் ஓட்டும் என்ற வசனம்தான் நினைவுக்கு வரும்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாகம் பகுதியை சேர்ந்த புலிகளின் புலனாய்வுத்துறை முகவர் சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.

அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த 8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.

அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட 8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வழக்கின் சித்திரவதை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.

அதில் குறித்த வழக்கின் முதலாவது சாட்சியமான இராசதுரை சுறேஸ் என்பவரது சாட்சி பதியப்பட்டது.

காலில் ஆணி அடித்து மர்ம உறுப்பை குறட்டால் நசித்தார்கள்.

உண்மையில் அப்படி நடந்திருந்தால் ஆணி அடித்தமை மருத்துவ அறிக்கைகள் ஊடாக உறுதிபடுத்தபட்டதா ? – மர்ம உறுப்பை குறட்டால் வெட்டி இருந்தால் அது 30 வருடத்திற்கு தடயமாக இருக்கும். அதனை மருத்துவ அறிக்கை ஊடாக உறுதிபடுத்த முடிந்ததா ?

இதில் அவர்இ எம்மை மாவீரர் தினம் கொண்டாடியதற்காக சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் எம்மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தினர். – புலிகள் என்ற அமைப்பு 2011ம் ஆண்டு தடை செய்யபட்ட அமைப்பு. தடை செய்யபட்ட அமைப்பின் நிகழ்வு நடாத்த முடியாது என்று சட்டம் சொல்கிறது. சட்டத்தை அமுல்படுத்தவேண்டியது நீதிமண்றத்தின் கடமை ஆகவே மாவீரர்தினம் அனுஸ்டிப்பது சட்டத்திற்கு முரணானது ஆகவே பொலிசார் சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யவும் சிறையில் அடைக்கவும் அனுமதி உண்டு. இழஞ்செளியன் உண்மையான ஒரு நீதிபதி என்டால் முதலில் சாட்சி சொல்லும் இவர்கள் சட்டத்தை மீறியதுற்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

எம்மையும் எம்முடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட சுமனன் என்பவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்தனர். – இது சுத்தப்பொய். மது இணையத்தின் புலனாய்வு விசாரனைபடியும் நாம் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டபட்ட அனைத்து பொலிசாரிடமும் இருந்து பெற்ற ஆதாரங்கள் இரகசிய விசாரனைகளில் இருந்து கிடைத்த தகவல்படி ஒரே அறையில் அடைத்து வைக்கவும் இல்லை. கைது செய்யபட்டவர்கள் தனிதனிய வேறு வேறு இடங்களில் அடைத்து வைக்கபட்டு விசாரிக்கபட்டனர். ஒருவருடன் ஒருவர் கதைக்காதவாறும் ஒருவருடன் ஒருவர் தகவல் பரிமாறாதவாறும் முகம் பாக்க முடியாத வேறு வேறு இடங்களில் தடுத்து வைக்கபட்டு இருந்தனர். இதனை நாம் 100 வீதம் நீதிமண்றத்திற்கு ஆதாரத்துடன் உறுதிபடுத்துவோம்.

அவ்வேளை சுமணன் என்பவரை முழங்காலில் இருத்தி கால்களுக்குள் கைகளை விட்டு கட்டி இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தொங்கவிட்டு அடித்தார்கள்.

இது சுத்தப் பொய். சுமன் விசாரிக்கபட்டபோது சுமனுக்கு அருகில் வேறு கைதிகள் எவரும் இரக்கவில்லை.

அதன்போது அவர் தாம் மருத்து பாவிப்பவர் எனவும் தம்மை அடிக்க வேண்டாம் என கூறினார். ஆனால் அதனை கருத்திலெடுக்காத பொலிஸார் தொடர்ந்து அவரை போட்டு அடித்தார்கள். இவ்வாறு (அவர் கூறும்போது குறித்த கொலை செய்யப்பட்ட நபர் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எப்படி இருந்தார் என்பதை சாட்சி நீதிபதிக்கு தனது உடலால் செய்து காண்பித்திருந்தார்.) – இது திட்டமிட்டு செய்து காட்டப்படும் ஒரு போலி நாடகம்.

இவ்வாறு அடிக்கும் போது சுமனன் இறந்து விட்டார். அவனது மூக்கால் இரத்தம் வந்துகொண்டிருந்தது. – இது சுத்தப் பொய் காரணம் மருத்து அறிக்கைபடி முக்கால் இரத்தம் வரவில்லை. அவரடைய முக்கு மற்றும் சுவாசபையுக்குள் தண்னீர் சென்றதனால் முச்சுத்திணறி இறந்துள்ளமை உறுதிபடுத்தபட்டுள்ளது.

அதன் பின்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களது வெறித்தனம் அடங்காமல் இறந்த பின்பும் போட்டு அடித்தார்கள். – இந்த கதை இழிங்செளியனை மடையனாக்க சொல்லபடும் புனைகதை.

எனக்கு ஆணிகளை காலில் இறுக்கி மின்சார கம்பியால் சுட்டார்கள். எனது ஆணுறுப்பை குறட்டால் நசித்தார்கள். – இவ்வாறு நடந்திருந்தால் அதனை உறுதிபடுத்த மருத்தவ அறிக்கை காட்ட முடியுமா ?

பின்னர் இறந்த சுமனனது உடலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நின்ற புதிய ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போனார்கள். – பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தவருக்கு எந்த பொலிஸ் வண்டியில் கொண்டு சென்றார்கள் என்று எப்படி தெரிந்தது ? தடுப்பு அறைகள் நான்கு பக்கமும் வீதியை நோக்கி பாக்ககூடியவாறு கண்ணாடிகள் பொருத்தபட்டதா ? சாட்சி சொன்னவர் பொலிஸ் ஜீப்பில் இரனைமடுவுக்கு கொண்டு சென்றதாக சொல்கிறார் அப்படியானால் 2011ம் ஆண்டு அனைத்து வண்டிகளும் ஆனையிறவிலும் பூனகரியிலும் பதியபட்டு பரிசோதனை செய்யபட்டே வீதியால் செல்ல அனுமதிக்கபட்டது அப்படியானால் இந்த ஜீப் போனத்தற்கான பதிவுகள் அந்த புத்தகத்தில் உள்ளதா ? நீதிமண்றம் ஏன் அதை பரிசோதிக்கவில்லை ? 

இதன்போது உமக்கும் சுமனன் என்பவருக்கும் அடித்த சித்திரவதை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் யார் யார் என்பதை அடையாளம் காட்ட முடியுமா? என பிரதி மன்றாதிபதி வினாவியபோது சாட்சி எதிரி கூண்டில் நின்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை முறையே அவர்கள் என்ன என்ன செய்தார்கள் என்று கூறியிருந்தார். அத்துடன் தற்போது இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் இல்லை எனவும் கூறியிருந்தார். – ஒரு பொய்காறன் தான் சொல்லும் அனைத்து பொய்களையும் உண்மையாக்க நிக்கும் பொலிசாரை இலகுவில் காட்டுவான். இது சிறு குளந்தையும் செய்யும்.

அவற்றை தொடர்ந்து அவரது சாட்சியங்களும் எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரனை செய்யப்பட்டது.

அடுத்து, இரண்டாவது சாட்சியமான துரைராசா லோகேஸ்வரனது சாட்சியம் பதிவு செய்யபட்டது.

தனி நாடு வேணுமா ? என கேட்டு தாக்கினார்கள்.

தாம் கடந்த 2011.11.21ஆம் திகதி தமது புன்னாலைகட்டுவன் சித்தி விநாயகர பாடசாலையில் கற்கும் தாய் தந்தையை இழந்த, போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கினோம். இதன்போது அங்கு வந்த ஊரேழு இராணுவ முகாமை சேர்ந்த பிரசாத் என்பவர் நீங்கள் மாவீரர் நிகழ்வா கொண்டாடுகிறீர்கள் என கேட்டனர். அதற்கு நாம் இல்லையென பதிளித்தோம்.

இதன்பின்பு அன்றைய தினம் இரவு 2011.11.21 எனது வீட்டிற்கு வந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிந்திக்கபண்டார, மயூரன், பிரசாந் ஆகியோர் என்னை திருட்டு குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்து சென்றனர்.

அதன் பின்னர் 24.11.2011 அன்று சுமனன் என்பவரை சிந்திக்க , மயூரன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்து காலை 9க்கும் 10க்கும் இடைப்பட நேரத்தில் கொண்டு வந்திருந்தனர்.

அதன்போது சுமனது நெற்றிப் பகுதியில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அத்துடன் தனிநாடு வேண்டுமா என கேட்டு கேட்டு எம்மை அடித்து. எமக்கு மின்சார கம்பியினால் சுடுவைத்தனர். என சாட்சியம் அளித்தார். – அப்படியானால் மூக்கால் இரத்தம் வடிந்தது என்று முதலாவது சாட்சி சொன்னது சுத்தப் பொய் என்பது இரண்டாவது சாட்சி சொன்னவருடைய கதையில் இருந்து உறுதியாகிறது. ஒரு பொதுமகனுக்கு நெற்றிக்கும் மூக்கிற்கும் வித்தியாசம் கட்டாயம் தெரிந்திருக்கும், ஆகவே முதலாவது சாட்சி சுமன் என்பவர் செத்தபறகு மூக்கால் இரத்தம் வந்ததாக சொன்னார் ஆனால் இரண்டாவது சாட்சி தன்னை கொண்டு வந்தபோது பொலிஸ் நிலையத்தில் இருந்த சுமனுக்கு நெத்தியில் இரத்தம் வடிந்துகொண்டு இருந்ததாக சொன்னார்.

இதனை தொடர்ந்து அரச தரப்பு விசாரனையில் உங்களையும் சுமனனையும் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களை அடையாளம் காட்ட முடியுமா என வினவியபோது குறித்த சாட்சி அவர்களை எதிரி கூண்டில் நின்றவாறு சுட்டு விரலால் அடையாளம் காட்டி அவர்களில் இருவரது பெயர்களையும் சரியாக குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்பு அவரது சாட்சியமானது எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்குவிசாரனை செய்யப்பட்டது.

இதன்போது அவரது மன்றில் வழங்கிய சாட்சியில் இரு விடயங்கள் பொலிஸ் தரப்பினது வாக்குமூலப் பதிவில் வேறுபட்டிருந்த நிலையில் அது மன்றால் அடையாளமிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவர் சாட்சிப் பதிவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

6ஆம் மற்றும் 8ஆம் சாட்சியும் பதிவு.

இதன் பின்னர் 6ஆம் மற்றும் 8ஆம் சாட்சிகளும் மன்றால் பதிவு செய்யப்பட்டது.

புதிய சாட்சியங்களை அணைக்க அனுமதி.

அதனை தொடர்ந்து இவ் வழக்கை நெறிப்படுத்தும் பிரதி மன்றாதிபதி குமார்ரட்ணம் இவ் வழக்கின் குற்றப் பத்திரிகையில் 30ஆம் 31ஆம் 32ஆம் சாட்சிகளாக மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை அணைப்பதற்கு மன்றின் அனுமதியை கோரியிருந்தார். அத்துடன் இவ் வழக்கின் சாட்சியில் இருந்து 2ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீக்குவதற்கான அனுமதியையும் கோரியிருந்தார்.

இவ்விரு விண்ணப்பங்களும் மன்றானது அனுமதியளித்துடன் இவ் வழக்கின் மீதி சாட்சிப்பதிவுகளை பதிவு செய்வதற்காக எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.

எதிரிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் நிலையத்தில் முறையிடவோ அல்லது அவராலோ இவ் வழக்கு தொடுக்கப்படாதுடன் அவர் தற்போது இல்லையெனவும் குறிப்பிட்டிருந்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற சாட்சி இருந்தாலேயே அவரை எதிரி தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரனை செய்கின்ற போதே குற்றச் சம்பவத்தின் உண்மை தன்மை மன்றுக்கு தெரியவரும். எனவே இவ் வழக்கில் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இல்லையென குறிப்பிட்டிருந்தனர்.

சித்திரவதை என்பது போர்க்குற்றம், அது மனிதவுரிமை மீறல்.

இந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக, குறித்த சித்திரவதை என்பது போர்க்குற்றம் எனவும், அது மனிதவுரிமை மீறல் குற்றமெனவும் குறிப்பிட்ட நீதிபதி குறித்த சித்திரவதை வழக்கினை பாதிக்கப்பட்டவரது உறவினர் பாதுகாவலர் ஆகியோரது முறைப்பாடுகளின் அடிப்படையிலும் நடாத்தமுடியும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பொன்றை மேற்கோள்காட்டியதுடன், சித்திரவதைக்கு உள்ளான நபர் உயிருடன் இல்லாவிட்டால் வழக்கை நடாத்த முடியாதென்றால் சித்திரவதைக்கு உள்ளான நபரை கொலை செய்துவிட்டால் வழக்கே இல்லாமல் தப்பித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி இவ் வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கும், குறித்த எதிரி தரப்பு சட்டத்தரணிகளது ஆட்சேபனை விண்ணப்பத்தையும் நிராகரித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவு இட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*