பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு நீதி வேண்டும்

இந்த முறைப்பாடு குறித்த ஆசிரியையால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை அதிபர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் கல்வியமைச்சர் குருகுலராசாவுடன் மிக நெருக்கமானவர்.

மிகப்பெரிய ஊழல் பேர்வழி. இவர் கிளி புனித திரேசா மகளிர் கல்லூரியிலிருந்து மாற்றலாகி கிளி மகாவித்தியாலயத்துக்கு குருகுலராஜாவால் அதிபராக நியமிக்கப்பட்டபோது ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்த்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால் வடமாகாண கல்வியமைச்சால் இரண்டு ஆசிரியர்களுக்கு வலுக்கட்டாயமாக இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆசிரியருக்கு எதிராக குறித்த அதிபர் குருகுலராஜாவின் செல்வாக்கில் செயற்படதொடங்கினார்.

கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் முருகவேள் ஆசிரியர் சார்பாக நியாயமாக செயற்பட்டமையால் வடமாகாண கல்வியமைச்சால் அப்பாடசாலைக்கு வலயகல்வி பணிப்பாளர் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில் – அதிபரின் முறைகேடுகள் தொடர்பாக இன்று விசாரணை செய்ய கல்வியமைச்சால் அப்பாடசாலைக்கு உதவி செயலாளரும் முன்னாள் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளருமான நந்தகுமார் தலைமையில் குழு சென்றிருந்தது.

இக்குழு விசாரணை என்ற மாயையை உருவாக்கி அதிபர் சார்பாகவே செயற்பட்டு – பாடசாலையில் விசாரணைக்குழுவுக்கு அதிபரால் பெரிய விருந்தும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்விசாரணை முடிவு நீதியாக அமையுமா?

பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு நீதி வேண்டும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*