மக்களின் முதுகில் சவாரி விடும் மருதங்கேணி அரச அதிபர் கனகேஸ்வரனும் சில புல்லுருவிகளும்..!!!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கனகேஸ்ரன் என்பவர் கடந்த 2015 தொடக்கம் இன்றுவரை தனது பணப்பிளைப்புக்காக பாரிய ஊழல் மோசடி வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் தெவிக்கின்றனர்.

குறித்த அரச அதிபரின் அனுசரணையுடன் சட்ட விரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் பாரியளவில் இடம்பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அப்பகுதிக்கான சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. மருதங்கேணி தெற்கு வீதி புனரமைப்பு.என்ற போர்வையில் இலட்சக்கணக்கான பண மோசடியும்,கடற்தொழிலாளர் சமாசத்தின் பெயரால் பல மோசடிகளின் கதாநாயகனாக மருதங்கேணி அரச அதிபர் கனகேஸ்வரன் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திவருவதாக அங்கிருந்து வரும் விசேட செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி கிழக்கு சமாசப் பொறுப்பை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன் வசம் வைத்துக்கொண்டு அதற்கான புதுத்தெரிவை காலம் தாழ்த்தி வருவதுடன்,புதிதாக தெரிந்தால் வருபவர் தங்களது ஓட்டுமாட்டுக்கும் கடல்னீர் பிரச்சனைக்கும் முடிவு கட்டி விடுவார்கள் என்ற அச்சத்தில் காலம் கடத்தி வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் விசமத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறியவந்துள்ளது.

அத்துடன் சமாசத்தின் பெயரில் பல மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை பாலசிங்கத்தின் ஆதரவோடு பெற்று தனக்கு தெரிந்த ஒப்பந்தகாரர்கள் மற்றும் மணல் வியாபாரிகளுக்கு ஒரு அனுமதிப்பத்திரத்தின் மூலமாக பல லோட் மணல்களை கள்ளமாக விற்பனை செய்து திருட்டு சம்பாத்தியம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பொது முகாமையாளரான பாலசிங்கத்தை தனது கைக்குள் வைத்துக்கொண்டு தான் செய்து வரும் ஊழல்களை மறைத்து வருவதோடு ஊழலின் ஒரு பகுதியை பாலசிங்கத்துக்கு வழங்கி வருவதாக இரகசிய தகவல் தெரிவிக்கின்றன.

ஊழல் பணத்தில் வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாச பொதுமுகாமையாளர் பாலசிங்கம் என்பவர் நான்கு கோடி ரூபாக்கு அண்மையில் பருத்தித்துறையில் வீடொன்றை வாங்கியுள்ளார். அதற்கான ஆதாரமும் எம்முடன் உள்ளது அதனை பின்னர் வெளிவிடுவோம்

கனகேஸ்வரன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிக்கு அரச அதிபர் பொறுப்பை பெற்றதில் இருந்து இன்றுவரை அந்த பிரதேசத்தை முன்னேற்ற எந்தவொரு உருப்படியான வேலைகளையும் முன்னெடுத்ததாக சரித்திரத்தில் கிடையாது மாறாக பணப்பிளைப்பை மட்டும் முன்னெடுத்து வருகின்றார்.

குறித்த பிரதேசம் போரினாலும்,சுனாமி அனர்த்ததினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்

முன்னர் வடமராட்சி கிழக்கு கடற்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சிலரை ஏமாத்தி அவர்களின் ஆழுகையின் கீழ் உள்ள சமாசத்தில் பணங்களை சுறுட்டி வந்தவரான சமாச முகாமையாளர் பாலசிங்கம் என்பவரை தம்வசம் வைத்துக்கொண்டே கனகேஸ்வரன் மோசடிகளை அரங்கேற்றி வருக்கின்றார். இவருக்கு துணையாக சில படிக்காத புத்தி ஜீவிகளும் பணத்துக்காக துணைபோயுள்ளனர்

மிகவும் கவலைக்குரிய விடையம் என்னவென்றால் வடமராட்சி கிழக்கில் முக்கிய பேர் போன கள்ளருடன் கனகேஸ்வரனும் இணைந்து வடமராட்சி கிழக்கு மக்களுக்கும் நாசம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடல் தொழில் இயந்திரங்கள் பலவற்றை களவாக விற்பனை செய்து தனது BOC BANK கில் இரண்டு கோடி ரூபாவை நிரப்பியவர் நபருக்கு உடந்தையாக கடற்புலி மறவன் மாஸ்ரரும் உடந்தையாக இருந்ததில் சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டது இதனால் புலனாய்வுத்துறையின் வலை வீச்சில் இருந்து பாலசிங்கம் தப்பியுள்ளார் என்பது கடந்த கால உண்மைகள் அத்துடன் இறுதி யுத்தமும் நபரை காப்பாற்றியுள்ளது

குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் பரவலாக முன்னர் பேசப்பட்டு வந்தபோதிலும் அதற்கான தண்டனை எவராலும் வழங்கப்படவில்லை.

அத்துடன் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் கணக்கு காசு எதுவும் யுத்த இறுதி நேரத்தில் ஒப்படைக்காமல் பெருந்தொகை பணத்தை சுறுட்டிக்கொண்டு மாத்தளன் பகுதியால் படகேறி பருத்தித்துறை சென்றடைந்தவர் தான் இந்த பாலசிங்கம்.

இவரின் வேலையே களவெடுப்பதும் பணம் சுறுட்டுவதும் இன்று நேற்றல்ல பல கால அனுபவம் மக்களால் அறியப்பட்ட உண்மை.

அடுத்த பேர் போன கள்ளன் பொன்னம்பலம்.

புலிகளின் காலப்பகுதியில் மருதங்கேணியில் புனரமைப்பு குழு என்று ஒரு காரியாலயம் திறந்து எந்தவொரு புனரமைப்பு வேலைகளும் செய்ததாக யாரும் அறிந்ததாக இல்லை மாறாக சமாதான காலப்பகுதியில் மணல்காட்டில் கடற்புலிகளின் அனுசரணையுடன் மணல் அகழ்வு வேலைக்கு பொறுப்பாக இருந்து மூன்று பார ஊர்திகளை சொந்தமாக கொள்வனவு செய்து மணல் ஏற்றுவதற்கு தனக்கு தொடச்சியாக அனுமதி வளங்கி பணம் சம்பாரித்தவர் பொன்னம்பலம்.

அடுத்தவர் கனியன் தமிழில் ஒழுங்காக கையெழுத்திட தெரியாதவர். இரண்டாவது திருமணம் முடித்தும் காணாதென மூன்றாவது திருமணத்துக்கு படாதபாடு படுகின்றார்.இவர் புனரமைப்பு குழு பொருளாளர் இவர் கடல் தொழில் செய்து முன்னேறவில்லை மாறாக புனரமைப்பு குழு பொருளாளர் பதவி முன்னேற வைத்துள்ளது

மற்றவர் மோகன் ஆசிரியர் இவருக்கு ஒரு எண்ணம் எப்போதும் தான் தளபதி சூசைபோல் ஆக வேண்டும் என்று அடிக்கடி தனது நண்பரிடம் கேப்பார் தான் சூசை மாதிரி என்று எல்லாரும் சொல்லுறாங்கள் நீங்கள் என்ன சொல்லவாறியள் என்று இவரும் புனரமைப்பு குழு என்ற வசந்த மாளிகைக்குள் பின்கதவால் புகுந்து பணம் சம்பாதித்தவர்.

குறித்த அடிவருடிகளும் கனகேஸ்வரனும் இணைந்து ஊழல் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி வீதிப்போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவதாக அறியப்பட்டுள்ளது.

இவர்கள் கடல் நீரில் இருந்து நன்னீர் பெறுவதற்கு படாதபாடு படுகின்றனர். இந்த நிலையில் குறித்த நடவடிக்கைக்கு எதிராக வடமராட்சி கிழக்கு மக்கள் அணிதிரண்டு ஆற்பாட்டம் நடத்தியபோது மேல் மட்ட அதிகாரிகளால் நன்னீர் திட்டம் தற்காலியமாக இடை நிறுத்தப்பட்டது. இதிலும் பாரிய நிதி மோசடி செய்யலாமென காத்திருந்த கனகேஸ்வரனுக்கும் பாலசிங்கத்துக்கும் செருப்பால் அடி விழுந்தது போல் மக்களின் ஆற்பாட்டம் இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கில் நல்லது எதுவும் நடந்தேற வேண்டுமென்றால் அரச அதிபர் கனகேஸ்வரன் மற்றும் சமாச பொது முகாமையாளர் பாலசிங்கம் ஆகிய கஞ்சல் குப்பைகளை வெளியேற்ற வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் தேவையாகும்..!!

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*