யாழில் 3 மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்து : 21 – 68 வயதுடைய 6 பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்குள் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரையிலான நேரத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில், நீர்வேலியை சேர்ந்த 68 வயதுடைய முதியவர், புலோலியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர், கரவெட்டி பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நபரும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இடம்பெற்று சில மணிநேரத்தில் பின்னர் 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தின் போது 35 வயதுடைய ஒருவரும், 22 வயதுடைய யுவதியும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தின் போது கோவில் பூசாரி ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*