ஊரில வெளிநாட்டில இருந்து வந்த எங்கட ஆக்களை டக்கெண்டு கண்டுபிடிக்க சில எளிய வழிகள்:

தண்ணிப்போத்தலும் கையுமா திரிவினம். கேட்டா நாங்கள் “போத்தல் தண்ணிதான்” குடிப்பம் எண்டுவினம்.

குளிக்கிறதுக்கு மட்டுமில்லை குண்டி கழுவுறதுக்கும் கூட “மினறல் வாட்டர்” தான் வேணும் எண்டுவினம்.

கூப்பிடு தூரத்தில இருக்கிற குஞ்சி ஆச்சியின் வீட்ட போறதுக்கும் “ஆட்டோ” வேணும் எண்டுவினம்.

சைக்கிள்ள ஏறமாட்டினம். ஏனெண்டுகேட்டா குண்டி அண்டும் எண்டுவினம். கவட்டுக்க நோகும் எண்டுவினம்.

வெய்யில் எண்டாலும் குடையோடதான் திரிவினம்.

காண்ட் பாக்,கைகீல்ஸ் ஓடதான் கக்கூசுக்கே போவினம்.

லிப்ரிக் வாயோடதான் சோறே தின்பினம்.

கோயில்ல கூட அரைக்காச்சட்டையோடதான் நிப்பினம்.

யாழ்ப்பாணம் போற 750 CTB பஸ்ஸில ஏறி “ஏசி” இல்லையோ எண்டு கேப்பினம்.

சங்கக்கடையில போய் சாமான் வாங்கிட்டு American Express credit காட்டை நீட்டுவினம்.

சுப்பர் மாக்கட்டிலதான் வெங்காயம் வாங்குவினம்.

வரும் போதே 2 chivas regal போத்தலோடதான் வருவினம்.

கழுத்திலை ஒரு பெரிய தங்க செயின் , கையில தடிப்பா கைச்செயின் , நாலு விரலில மோதிரம் போட்டிருப்பினம்.

லண்டனில இருந்து வந்தா அதுக்கு ஒரு ரீசேட், அவுஸ்திரேலியாவில இருந்து வந்தா அதுக்கு ஒரு ரீசேட் போடுவினம்.

கூலிங் கிளாசை கொழுவிக்கொண்டே திரிவினம்.

கொழுத்துற வெய்யில்லையும் புள்க்கை சேட்டும் சப்பாத்துமாத்தான் திரிவினம்.

கொமெட் இருந்தாத்தான் கக்கூசுக்கு போவம் எண்டுவினம். துடைக்கிறது ருசு கேப்பினம்.

கட்டிலும் மெத்தையும் வேணும் எண்டுவினம். பாயில படுத்தால் முதுகு நோகும் எண்டுவினம்.

Sunscreen lotion பூசிக்கொண்டுதான் வெளியில போவினம். கேட்டா கறுத்துப்போடுவம் எண்டுவினம்.

நடுச்சாமத்தில எழும்பி குளிப்பினம். ஏனெண்டு கேட்டால் UK இல இப்பதான் மத்தியானம் எண்டுவினம்.

ரீவியில BBC,CNN channels வராதோ எண்டு கேப்பினம்.

“Small palmyra” எண்டு வடலியோட நிண்டு “selfie ” போடுவினம்.

Bluetooth, headphones ஓடதான் திரிவினம்.

பின்னேரம் எண்டதும் beach இக்கு போவம் எண்டு கேப்பினம்.

கடைசியா;
உழுந்து வடைக்கு இப்பவும் ஊரில ஓட்டை போடுகினமோ எண்டும் கேப்பினம்!!!

அடிக்குறிப்பு:
வெளிநாட்டில இருந்து ஊருக்குப்போறவை இனி சனிக்கிழமை சாமியாரை மறக்கவேமாட்டினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*