யாழ்ப்பாணப் பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்

மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை எதிர்வரும் யாழ் மாவட்டச் செயலக தாபனக்கிளையில் 22ம் திகதிக்கு முன்பதாக தம்மை பதிவு செய்துகொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதிக்கு முன்னர் பட்டம் பெற்ற வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் ஏற்கனவே தமது விபரங்களை மாவட்டச் செயலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

எனினும் அவ்வாறு பதிவு செய்தவர்கள் தற்போது தொழிலற்றிருக்கும் பட்டதாரிகளை பதிவு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே பட்டதாரிகள் காலம் தாழ்த்தாது உடனடியாக தமது பதிவை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வடமாகாணத்தில அரச தொழிலற்ற பட்டதாரிகள் விபரங்களை ஆண்டு ரீதியாக ஆளுநர் கோரியுள்ளதாகவும் அற்கேற்றாற் போன்று விபரங்களை பதிவு செய்யுமாறும் அரசாங்க அதிபர் கோரியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*