வல்லைவெளியில் கவனித்தது

வல்லைப்பிள்ளையார் கோவிலுக்கும் பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியின் இருமருங்கிலும் வழமையாக தண்ணீர் தேங்கிநிற்கும் பகுதிகளில் வழமையாக தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய உயரத்தை விட கூடுதலாக குறித்த இடைவெளியில் தனித்தனி மண் மேடுகளை உருவாக்கி அதன் மீது மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு தான் நாவற்குழி பிரதேசத்திலும் தேங்கி நிற்கும் தண்ணீருக்குள் சீமெந்து குழாய்கள் அமைத்து அதனுள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறார்கள்.

இவையெல்லாம் பிரதேச செயலகங்களின் யோசனையா அல்லது வடமாகாணசபையின் யோசனையா தெரியவில்லை, யாருடையதாக இருந்தாலும் பாராட்டுக்குரிய விடயம், அந்த மரங்கள் அனைத்தும் வளர்ந்து வீதியின் இருமருங்கிலும் நிழல்பரப்பி நிற்கும் பொது அந்த பிரதேசமே பயனுள்ளதாகவும் மழை வீழ்ச்சிக்கும் காற்று சுத்திகரிப்புக்கும் காரணமாகவும் மாறும்.

இவ்வாறு தான் பண்ணை பாலத்திற்கு அருகிலும் வீதியின் இருமருங்கிலும் மண் பரப்பி சீமெந்து குழாய்களில் மரம் நடுவதற்கான ஒழுங்குகளை இராணுவம் அவசர அவசரமா செய்தது, ஆனால் நாட்டின் ஜனாதிபதி வந்தால் தான் மரங்கள் நடமுடியும் என்பதால் அந்த வேலைகள் அப்படியே கிடக்கிறது …

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*