நேற்றிரவு பயங்கர வாள்வெட்டுத் தாக்குதல்

இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறினால் இளைஞர்குழு ஒன்று வீதியில் சென்றவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு ஒன்பது மணியளவில் கொக்குவில் பிடாரி கோவில் பகுதியில் நடை பெற்றுள்ளது.
மேற்படி சம்பவத்தினால் நேற்றைய தினம் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதோடு, யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வந்திருந் தனர்.
நேற்று மாலை ஐந்து மணியளவில் குறித்த பகுதியில் பிடாரி கோவில் மற்றும் கேணியடி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களுக்கிடையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாய்த் தகராறு இடம்பெற்றுள்ளது.
இதனால் இரு இளைஞர்களும் மோதிக்கொள்ள முயன்ற வேளையில் அங்கு நின்ற இளைஞர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். எனினும் கேணியடியை சேர்ந்த குறித்த இளைஞர்,ஒன்பது பேர்கொண்ட இளைஞர் குழு ஒன்றை அழைத்து வந்து, தன்னோடு வாய்த்தகராறில் ஈடுபட்ட இளைஞரை தாக்குவதற்கு தேடியுள்ளார்.
இதன்போது வீதியில் சென்றவாகள் உள்ளிட்ட குறித்த கோவிலுக்கு அருகாமையில் நின்றிருந்த இளைஞர்கள் மேற்படி குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
தாக்குதலின்போது சிலருக்கு சிறுகாயங்களே ஏற்பட்டிருந்த போதும் மூன்று மோட்டார் சைக்கிள்களில் ஒன்பது பேர் கொண்ட குழுவே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு வந்தவர்கள் வாள்கள், பொல்லுகள், மற்றும் இரும்பு கம்பிகள் என்பவற்றை வைத்திருந்ததாக அங்கு நின்றவர்கள் கூறுகின்றனர். இதன் போது அங்கு நின்ற வான் சாரதி ஒருவரும் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
 இந்த வாள்வெட்டு சம்பவம் நடைபெற்று முடிந்ததும். பிடாரி கோவிலடியை சேர்ந்த இளைஞர்கள் தமது வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாக கேணியடியை சேர்ந்த இளைஞரின் வீட்டார் பொலிஸாரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் இரு வீடுகளுககும் சென்று விசாரணை மேற்கொண்டதோடு வாள்வெட்டு குழுவை அழைத்து வந்த இளைஞரினையும் தேடி வருகின்றனர்.
Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*