ஆலயமானாலும் அனுமதியின்றி கட்டடத்தை அமைக்க முடியாது

பிர­தேச சபை­யில் அனு­மதி பெறப்­ப­டா­மல் ஆல­ய­மாக இருந்­தா­லும் புதிய கட்­ட­டத்தை அமைக்க முடி­யாது. அனு­மதி பெறப்­ப­டா­மல் அமைக் கப்­பட்ட கட்­ட­டங்­களை 3 மாத காலத்­துக்­குள் அகற்­று­மாறு சாவ­கச்­சேரி மாவட்ட நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.
மட்­டு­வில் வடக்கு தேவாலய வீதி­யில் சபை­யின் அனு­மதி பெறப்­ப­டா­மல்   அமைக் கப்­பட்ட பிள்­ளை­யார் சிலை மற்­றும் கொடி­கா­மம் பகு­தி­யில்    சபை­யில் பெறப்­பட்ட அங்­கீ­கா­ரத்­துக்கு மேல­தி­க­மாக அமைக் கப்­பட்ட கட்­ட­டம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யால் சாவ­கச்­சேரி மாவட்ட நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்யப்பட்டது.
மட்டுவில் தேவாலய வீதியிலிருந்து பனையடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு செல்லும் சந்தியில் முன்னர் நின்ற மரத்தின் கீழ் சூலம் வைத்து இந்து மக்கள் வழிபட்டு வந்தனர். வீதி அகலிப்புக்காக அண்மையில் மரம் அகற்றப்பட்டதையடுத்து, அந்த இடத்தில் ஊர் மக்கள் சிலர் சந்தியில் சிறிய  கட்டடம் அமைத்து பிள்ளையார் சிலையை கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி நிறுவி வழிபட்டு வந்தனர்.
புதிதாக கட்டடம் அமைக்கப்பட்ட இடத்தின் காணி உரிமையாளர் கட்டடத்தை அப்புறப்படுத்துமாறு பிரதேச சபைக்கு முறையிட்டார். அனுமதி பெறப்படாமல் கட்டடம் அமைக்கப்பட்டமை எதிராக  சாவகச்சேரி மாவட்ட  நீதிமன்றில் சாவகச்சேரி பிரதேச சபை வழக்குத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கைப் பரிசீலனை செய்த நீதிபதி, “பிரதேச சபையின் அனுமதியின்றி ஆலயக் கட்டடமாயினும் அமைக்கக்கூடாது.
புதிதாகக் அமைக்கப்பட்ட கட்டடத்தை 3  மாதங்களுக்குள்  அப்புறப்படுத்த வேண்டும். பிரதேச சபையிடம் உரிய அனுமதியைப் பெற்று கட்டத்தை அமைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
நாவற்குழி பௌத்த விகாரை அமைக்கும் இடம் சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ளமை நினைவிற் கொள்ளத் தக்கது.
இதேவேளை, கொடிகாமம் பகதியில் சுற்று மதில் அமைக்க சபை அனுமதித்ததைவிட மேலதிகமாக 5 அடி தூரத்துக்கு கட்டடப்பட்டமை தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபையால் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி,  “சபையால் அனுமதி வழங்கப்பட்ட அளவைவிட மேலதிகமாக புதிதாக கட்டடம் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைப்பதாயின்  அதற்கும் சபையின் அனுமதி பெறப்படல் வேண்டும். எனவே சபையின் அனுமதி பெறப்படாமல் மேலதிகமான அமைத்த மதில் சுவரை உடைக்க வேண்டும்” என்று காணி உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.
60 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட 11 கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய 49 கிராம அலுவலர் பிரிவுகள் சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குள் அடங்கியுள்ளது.
Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*