கண்ணீருடன் ஒரு jaffna பாடசாலையில்

இன்று நாரந்தனையில் உள்ள ஒரு பாடசாலைக்கு மாணவர்களின் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்தேன்.

பத்து வயது மாணவன் ஒருவனை பரிசோதிக்கும் போது சோர்வாக இருந்தான்.

வகுப்பாசிரியரும் வகுப்பில் அம் மாணவன் அடிக்கடி நித்திரை கொள்வதாகக் கூறினார்.

அம் மாணவனிடம் காரணத்தை கேட்ட நான் தலையைத் தாழ்த்தினேன் எனது கண்ணீரை மறைப்பதற்காக.

அவனது அம்மாவுக்கு பெண் பிள்ளை பிறந்திருக்கிறது.

(அவனது நான்காவது சசோதரி) அம்மா பகலில் வேலைக்கு செல்கிறா பாவம் இரவில் எழும்பும் குழந்தையை அம்மாவுடன் சேர்த்து நித்திரையாக்குவதாக கூறினான்.

இவனுக்கு நித்திரை இல்லை. பகலிலும் சகோதரர்களைப் பார்த்துக் கொள்வது இப் பத்து வயது பாலகனின் பொறுப்பு. வறுமை ஒழுங்கான சாப்பாடு கூட இல்லை .

தீவுப் பகுதியில் கோயில்கள் கட்டுவதற்கு லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் பணம் கொடுப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.

தேவையான உதவிகளை நீங்களே நேரடியாக செய்யலாம்.

போசாக்கின்மையால் வறுமையால் துவண்டுகொண்டிருக்கும் இவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

கோவில் பிறகு கட்டலாம்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*