சுகா­தா­ரச் சீர்­கேட்­டு­டன் உண­வ­கம் நடத்­தி­ய­வ­ருக்கு ரூபா 30,000 தண்­டம்

சுகா­தா­ர­மற்ற நிலை­யில் உணவு உற்­பத்­திப் பகு­தி­ய­யை­யும் விற்­பனை நிலை­யத்­தை­யும் வைத்­தி­ருந்த உண­வக உரி­மை­யா­ள­ருக்கு 30 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்து சாவ­கச்­சேரி நீதி­வான் மன்­றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

கொடி­கா­மம் நக­ரப் பகு­தி­யில் உள்ள வர்த்­தக நிலை­யங்­கள் மீது சாவ­கச்­சேரி சுகா­தா­ரத் திணைக்­க ­ளத்­தி­னர் நேற்­று­முன்­தி­னம் திடீர் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­ட­னர்.

சோத­னை­யின் போது, சுகா­தார சீர்­கேட்­டு­டன் இயங்­கிய உண­வக நிலைய உரி­மை­யா­ள­ருக்கு எதி­ராக பொது சுகா­தா­ரப் பரி­சோ­த­கர் ஜென்­சன் றொனால்ட் நேற்று சாவ­கச்­சேரி நீதி­வான் மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­தார்.

தூசு­கள் படிந்த நிலை­யில் உணவு தயா­ரிப்பு நிலை­யத்தை வைத்­தி­ருந்­தமை, மாச­டைந்த கைட­தா­சிப் பெட்­டி­யில் உண­வுப் பொருள்­கள் வைத்­தி­ருந்­தமை, சுத்­த­மற்ற நிலை­யில் உண­வ­கத்தை வைத்­தி­ருந்­தமை ஆகிய குற்­றச்­சாட் டுக்­க­ளு­டன் நீதி­மன்­றில் உண­வக உரி­மை­யா­ள­ருக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

வழக்கு விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­ட­போது உண­வக உரி­மை­யா­ளர் குற்­றத்தை ஒப்­புக் கொண்­டார். அவர் மீதான 3 குற்­றங்­க­ளுக்­கும் தலா 10 ஆயி­ரம் ரூபா வீதம் 30 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்து நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

இதே­வேளை கடந்த வாரம் கொடி­கா­மம் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர் பிரி­வுக்­குட்­பட்ட பகுதி­க­ளில் நடாத்­தப்­பட்ட சிறப்பு டெங்­குக் கட்டுப்­பாட்டு பரி­சோ­த­னை­க­ளில் டெங்கு நுளம்­புக் குடம்­பி­கள் காணப்­பட்ட ஆறுகுடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு கொடி­கா­மம் பொலி­ஸார் வழக்­குப் பதிவு செய்­தி­ருந்­த­னர். இவர்­க­ளில் ஐவ­ருக்கு எதி­ரான வழக்­கு­கள் நேற்று நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டன.

வழக்­கு­களை விசா­ரித்த நீதி­வான் குடி­யி­ருப்­பா­ளர் கள் குற்­றத்தை ஒப்­புக் கொண்­ட­தை­ய­டுத்து தலா 3 ஆயி­ரம் ரூபா வீதம் தண்­டம் விதித்­தார். மேலும் பொது இடத்­தில் புகை பிடித்த நப­ருக்கு சாவ­கச்­சேரி நீதி­வான் மன்­றால் நேற்று 4 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டது.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*