கழிவு நீர் தேங்குவதால் சாவகச்சேரி வைத்தியசாலை நோயாளர்கள் விசனம்

சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லை­யில் உள்ள கழிவு நீர்த் தொட்­டி­க­ளில் தண்­ணீர் தேங்கி நிற்­ப­தால் டெங்கு நுளம்­பின் தாக்­கம் அதி­க­மாக உள்­ளது என்று நோயா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

வைத்­தி­ய­சாலை வளா­கத்­தில் உலக வங்­கி­யின் அனு­ச­ர­ணை­யு­டன் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யால் 2004 ஆம் ஆண்டு அமைக்­கப்­பட்ட பிர­சவ விடு­தி­யில் உள்ள நோயா­ளர்­கள் குளிக்­கும் நீர் வாய்க்­கால் வழி­யாக அங்கு அமைக்­க ப்­பட்­டுள்ள தொட்­டி­யில் சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றது. தொட்டி நிரம்பி வழிந்­தோ­டும் நீர் அரு­கில் உள்ள வாழைத் தோட்­டத்­துக்கு விடப்­பட்­டு ள்­ளது. வாழை­க­ளைச் சுற்றி அமைக்­கப்­பட்ட பாத்­தி­க­ளும் நிறைந்து நீர் வழிந்­தோ­ட­மு­டி­யா­மல் அவ்­வி­டத்­தி­லேயே தேங்­கு­கின்­றது.

அங்கு டெங்கு நுளம்­பு­கள“ உற்­பத்­தி­யாகி பிர­சவ விடுதி மற்­றும் 3, 4, 5, 6 ஆகிய விடு­தி ­க­ளில் தங்­கி­யுள்ள நோயா­ளர்­க­ளைத் தாக்கி டெங்கு நோயா­ளர்­க­ளாக மாற்­று­கின்­றன. ஏற்­க­னவே வைத்­தி­ய­சா­லை­யில் உள்ள 3 மற்­றும் 5 விடு­தி­கள் டெங்கு நோயா­ளர்­கள் சேர்க்­கப்­பட்டு சிகிச்சை வழங்­கப்­பட்டு வரும் நிலை­யில் வைத்­தி­ய­சாலை வளா­கத்­தில் டெங்கு நுளம்­பின் தாக்­கம் அதி­க­மாக இருக்­கின்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

“கடந்த மழை காலத்­தில் பொது­மக்­கள் வழங்­கிய முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து பொது சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் பார்­வை­யிட்டு தொட்­டி­யில் சேரும் கழிவு நீரை உட­னுக்­கு­டன் வெளி­யேற்ற வேண்­டு­மெ­ன­வும் அரு­கில் உள்ள குப்­பைக் கிடங்கை மூட வேண்­டு­மென்­றும் அறிக்­கை­யிட்­னர்.

இரு வார காலத்­தி­னுள் நிறை­வேற்றப்­ப­டா­வி­டின் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று வைத்­தி­ய­சா­லைப் பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஓரிரு நாள்­க­ளில் குப்­பைக் கிடங்கு மூடப்­பட்ட போதி­லும் தேங்­கி­யுள்ள கழி­வு­நீரை வெளி­யேற்ற நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வில்லை.”- என்று சாவ­கச்­சேரி சுகா­தார வைத்­திய அதி­காரி அலு­வ­லக அலு­வ­லர்­கள் தெரி­வித்­த­னர்.

“கழிவு நீரில் டெங்கு நுளம்­பின் குடம்­பி­கள் உள்­ளன.அவற்றை அழிப்­ப­தற்கு புகை­யூட்­டல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. தொட்­டி­யில் சேரும் கழிவு நீரை வெளி­யேற்­றும் நீர் இறைக்­கும் இயந்­தி­ரம் எம்­மி­டம் இல்லை.அவை பிராந்­திய சுகா­தார திணைக்­க­ளத்­தால் கொள்­வ­னவு செய்து வழங்­க­வேண்­டும். நீரி­றைக்­கும் இயந்­தி­ரம் வழங்­கு­மாறு அறி­வித்­தும் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை.” – என்று வைத்­தி­ய­சா­லைப் பொறுப்­ப­தி­காரி தெரி­வித்­தார்.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*