யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான பிரமிட் செய்தவர் கைது

சட்டவிரோதமான பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்டு நிதி மோசடி செய்த நபர் ஒருவரை, வெள்ளிக்கிழமை (09) கைது செய்துள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் குறித்த நபரிடம் தான் செலுத்திய பணத்தை கேட்ட போது, அவர் செல்லுபடியற்ற 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கியுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் மேலும் பலரிடம் நிதி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாகவும் மறைமுகமாகவும் ஈடுபடும் நிதிநிறுவனங்களுடன் பொது மக்களை தொடர்பு கொள்ள வேண்டாமெனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*