யாழ் மாவட்டம் வறுமைக் கோட்டின் கீழ்!!!

கல்வியில் தரப்படுத்தலை ஒரு காலத்தில் எதிர்த்த யாழ் மாவட்டம் இன்று தரப்படுத்தலால் நன்மையடைகின்றது.

அவ்வளவுக்கு மாழ் மாவட்டத்தின் கல்வித்தரம் வீழ்ச்சி கண்டுள்ளது.

தற்போது யாழ் மாவட்டம் தனிநபர் வருமானத்திலும் வீழ்ச்சி கண்டு வறுமைக்கோட்டினுள் வருகின்ற மாவட்டமாகி உள்ளது.

வறுமைக் கோட்டு எல்லையைத் தீர்மானிக்கும் தனிநபர் வருமானம் ஜனவரி 2017இல் 4207 ரூபாயாக இருந்து பெப்ரவரி 2017இல் 4229 ரூபாயாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து 4169 ரூபாய்களை தனிநபர் வருமானமாகக் கொண்ட யாழ்ப்பாணம் வறுமைக்கோட்டுக்குள் வீழ்ந்துள்ளது. கொழும்பு மாவட்டம் ஆகக் கூடிய தனிநபர் வருமானம் 4396 ரூபாய்களைக் கொண்டு முன்னணியில் உள்ளது.

மொனராகலை மாவட்டம் 3843 ரூபாய்களை தனிநபர் வருமானமாகக் கொண்டு வறுமைக்கோட்டின் கடைநிலையிலுள்ளது.

அதற்கு முன் ஹம்பாந்தோட்டை மாவட்டம் 3895 ரூபாய்களை தனிநபர் வருமானமாகக் கொண்டு கடைசிக்கு முன்நிலையில் உள்ளது.

தமிழ் பிரதேசங்ககளைக் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணத்தில் தனிநபர் வருமானத்தில் முன்னணியில் மன்னார் மாவட்டமும் கடைநிலையில் யாழ் மாவட்டமும் உள்ளது.

கடந்த காலங்களில் யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டங்களைக் காட்டிலும் யாழ் மாவட்டம் தனிநபர் வருமானத்தில் கீழ் மட்டத்தில் இருப்பதற்கான காரணங்கள் கண்டிறியப்பட வேண்டி யுள்ளது.

யாழ் மாவட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகுவம் பின் தங்கிய பிரதேசங்களக இருந்த வன்னி மாவட்டங்கள் தனிநபர் வருமானத்தில் உயர் நிலையில் காணப்படுவதற்கு அம்மக்களின் மிகக் கடுமையான ஒழைப்பும் தன்னம்பிக்கையுமே காரணமாக இருந்திருக்க முடியும்.

யாழ் மாவட்டத்தில் அரசாங்க உத்தியோகங்களுக்காகக் காத்திருப்பதும் வெளிநாட்டு உறவுகளின் உண்டியல் பணத்தில் தங்கியிருக்கின்ற ஒரு போக்கும் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக அமைந்துள்ளதையே இப்புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

தமிழ் பிரதேசங்களின் தனிநபர் வருமானம்
1. மன்னார்: ரூ 4368
2. வவுனியா: ரூ 4322
3. களிநொச்சி: ரூ 4288
4. மட்டக்களப்பு: ரூ 4281
5. திருகோணமலை: ரூ 4230
6. அம்பாறை: ரூ 4197
7. முல்லைத்தீவு: ரூ 4183
8. யாழ்ப்பாணம்: ரூ 4168

யாழ் மாவட்டம் வறுமைக் கோட்டினுள் வீழ்ந்த போதும் வெளிநாடுகளில் இருந்து உறவுகள் அனுப்புகின்ற உதவிகள் அம்மாவட்டத்தின் நுகர்வுக் கொள்வனவை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது.

ஒரு பிரதேசத்தினுடைய தனிநபர் வருமானம் வீழ்ச்சி அடைகின்ற போது அப்பிரதேச மக்களுடைய கொள்வனவுத் திறன் வீழ்ச்சி அடையும், கொள்வனவுத் திறன் வீழ்ச்சி அடைந்தால் அபபிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும்.

யாழ் மாவட்டத்தின் இளையோரின் விகிதாசாரத்தில் ஏற்படுகின்ற வீழ்ச்சியும் இளையோர் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதும் அம்மாவட்டத்தின் தனிநபர் வருமானத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகலாம்.

யாழ் மாவட்டத்தின் இந்தத் தனிநபர் வருமானத்தின் வீழ்ச்சி மற்றும் கல்வி வீழ்ச்சிக்கும் நெருங்கிய உறவு உண்டு. கல்வியின் வீழ்ச்சி வருமானத்தையும் வருமானத்தின் வீழ்ச்சி கல்வியையும் பாதிக்கும்.

பொருளாதார கல்வி நிபுணர்கள் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இவை பற்றி அறிவுறுத்தவது அவசியம்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*