ஊழல் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சரையே நீக்கும் கேவலம்

ஊழல் செய்த அமைச்சர்களை விலக்கமுடியாத முதலமைச்சர் அவர்களை தாங்களாகவே விலகும்படி கெஞ்சினார்.

அந்த அமைச்சர்கள் அப்போதும் விலக முன்வரவில்லை. மாறாக முதலமைச்சரையே விலக்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுற்பட்டமைக்காக ஒரு முதலமைச்சரையே நீக்கும் கேவலம் இலங்கையில் வடமாகாணத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தமைக்காக ஒரு முதலமைச்சரை நீக்க முனைபவர்கள் எப்படியானவர்களாக இருப்பார்கள்?

அவர்களும் ஊழல்வாதிகள் என்பதால்தான் ஊழல் அமைச்சர்களுக்கு துணை போகிறார்கள் என்ற சநதேகம் மக்கள் மனதில் எழுவது நியாயம்தானே?
தமிழக ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளையே விஞ்சும் அளவிற்கு எமது வடமாகாண அரசியல்வாதிகள் சென்றுள்ளார்கள்.

மாகாணசபை கலைக்கப்படும்; என முதலமைச்சர் ஒரு அறிக்கை விடுவாராயின் அத்தனை உறுப்பினர்களும் முதல்வர் பின்னால் நிற்பர்.அந்தளவிற்கு பதவி வெறி பிடித்தவர்களாக இந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு கொஞ்சம்கூட மக்கள் மீது அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறார்கள்.

இவர்களுக்கு மாதா மாதம் சம்பளம், அதைவிட ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம்.

மக்கள் வரிப் பணத்தில் வீண் தண்ட செலவு கடந்த 3 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்களுக்காக இவர்கள் செய்தது ஒன்றும் இல்லை.

மக்களின் நம்பிக்கையை வடமாகாணசபை இழந்துவிட்டது.

எனவே வடமாகாணசபை உடனடியாக கலைக்கப்பட வேண்டும்.

அவர்கள் மக்கள் முன் வந்து மக்கள் அங்கீகாரம் பெற வேண்டும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*