தரங்கெட்ட சுகிர்தனுக்கு சில தரமான கேள்விகள்

01. கட்சி பெரிதா???

02. தமிழர்களின் ஒற்றுமை அவசியமா???

03. நான் பெரிதா நீ பெரிதா என்பது அவசியமா???

04. தங்களின் பயணப்பாதை த.தே.கூட்டமைப்பின் பாதையா?

05. அல்லது தமிழரசுக்கட்சியின் பாதையா???

06. வடமாகாண சபைக்குள் நடைபெறும் ஊழல்கள் கண்டுபிடிக்கும் திறமைகள் / அதிகாரங்கள் தமிழரசுக்கட்சிக்கு மட்டும்தான் இருக்கிறதா???

07. மாகாணசபைக்கு சென்றதன் நோக்கம் எது தவறாக இருந்தாலென்ன எது சரியாக இருந்தாலென்ன தமிழரசுக் கட்சிக்குள் முடங்கிப்போவதா? அல்லது மக்கள் நலனுக்காக குரல் கொடுப்பதா????

08. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்துப்போட்ட தங்களின் தனிப்பட்ட காரணத்தை அறிய முடியுமா????

09. ஊழல் தொடர்பாக இருவருக்கெதிராக ஒரு மாத விடுமுறை விசாரணை நடாத்துவதோ அல்லது தங்களாலும் வடபுல மக்களாலும் மாகாண முதல்வராக அமர்த்தியவரை எதிரிகளுடன் சேர்ந்து வெட்டி வீழ்த்துவதோ தங்களுக்கு சரியாக தென்படுகிறது???

10. தங்கள் பணி மக்களுக்கா????? தமிழரசுக்கட்சிக்கா?????

11. ஊழல் அளிக்கப்படுவதுதான் இருவரினதும் நோக்கம் என்கிறார்கள்!!!

12. அமைச்சர்களின் மீது விசாரணை…. விசாரணைக்குழுவின் பதில்கள் இருவர் குற்றவாளிகள்….. மற்றயவர்கள் மீது குற்றங்கள் இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படவில்லை. ஆனாலும் அவர்கள் விசாரணைக்கு உரியமுறையில் சமூகம் தரவில்லை என்னும் முறைப்பாடும் கூடவே சொல்லப்பட்டுள்ளது….
இவ்வாறு முதல்வரால் சொல்லப்பட்ட வேளையில்….. வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்..

13. அந்தச் சபையில் ஏன் முதலமைச்சரின் முக்கிய முடிவுக்கான உரைக்கு செவி சாய்க்காது இடை நடுவில் வெளியேறினீர்கள்????

14. ஊழல் தொடர்பான முக்கிய முடிவுகளை அறிய முதல் ஏன் நடையைக் கட்டினீர்கள்???

15. முதல்வர் உரையாற்றிய பின்பு ஏன் அந்த சபையில் வைத்து தமிழரசுக்கட்சி இப்போது கேட்டுவரும் கேள்விகளை எதிர்க்கட்சிகளுடன் கரம் கோர்த்து கேட்கவில்லை????

16. குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட விசாரணையை ஏன் வரவேற்கவில்லை???
ஏன் மிகுதி 2 பேருக்கும் 1 மாத விடுமுறையை கொடுக்கிறீர்கள் என்ற கேள்விகளை முதல்வரின் முடிவின் பின்பு அந்த சபையிலேயே கேட்க வேணும் என்ற நல்லெண்ண மனது வெளியேறியவர்களுக்கு வரவில்லை???? அல்லது கேட்டு கிடைக்கவில்லையா????

17. மிகுதி 2 பேரும் நிரபராதிகள் என தாங்கள் கருதினால் அவர்கள் மீதான விசாரணையை துரிதப்படுத்துங்கள்…. அதுவரைக்கும் அவர்கள் மீதான விடுமுறை ரத்து செய்வதற்கான யோசனையை ஏன் சபையில் முன்வைக்கவில்லை???? அல்லது கேட்டு கிடைக்கவில்லையா????

18. இவ்வாறான சிந்தனைகளை ஏன் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தவர்கள் அந்த சபையில் ஒரு பேரணையாக முன்வைக்காமல் ஆளுநரின் கால்களைப் பற்றினீர்கள்????
இரு ஊழல்வாதிகளை முதல்வரும் நீங்களும் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். மிகுதி இருவர் தொடர்பாக இரு பகுதியும் குற்றவாளிகள் என்பதை கோரவில்லையே….. விசாரணை தொடர்பான அறிக்கை அவர்கள் மீது விசாரணை பூரணப்படுத்தவில்லை… விசாரணைகள் மேற்கொள்ளப்படவேணும் எனும் அவசியத்தை உணர்த்தியதே….. ஏன் அந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதை தாங்கள் விரும்பவில்லை???

19. மருத்துவ துறையிலும் போக்குவரத்துத் துறையிலும் மோசடிகள் எதுவுமே இடம்பெறவில்லை என்பதை நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தவர்கள் உறுதிப்படுத்துவீர்களா?

20. மக்களின் வாக்குகளுக்கு வடக்கின் கேவலம் கெட்ட அரசியலா பதில்?
அல்லது தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் 1000 கட்சிகள் உருவாகினாலும் உருவாகட்டும்…. உங்கள் கட்சியின் பாதையில்தான் பயணிப்பேன் எனும் மனனிலையில் இருக்கிறீர்களா?

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*