யாழில் தயாகரன் மற்றும் மதனின் தேசத்துரோகத்திற்கு பலியாகிய யாழ் ஊடகத்துறை

aaயாழ் ஊடக மையம் என்ற பெயரில் தனது சுய தேவைக்கு ஊடகத்துறையினை தனது எடுபிடியாக பயன்படுத்த முயற்சிப்பவர் றட்ணம் தயாபரன். இவர் ஒரு அரச ஊழியர். முழு நேரம் அரசில் வேலை செய்கிறார். இவர் ஒரு ஊடகவியலாளரோ அல்லது ஊடக நிறுவனத்திலோ வேலை செய்பவர் இல்லை.

யாழ் குடா நாடு உட்பட இலங்கையில் 150 தமிழ் ஊடகத்துறையினர் உள்ளனர். இவர்களின் பெயரை வைத்து அரச சார்பற்ற நிறுவனங்களில் மோசடி செய்வதே தயாபரன் செய்யும் வேலை. இதற்கு துணை நிற்பவர் தமிழ் மிரர் இணையத்தை நடாத்தும் மதன் என்பவர்.

யாழ் குடாநாட்டில் கொல்லபட்ட ஊடகத்துறையினரை காலால் மிதித்த தயாபரன் யாழ் குடாநாட்டில் தமிழ் மக்களையும் தமிழ் ஊடகத்துறையினரையும் அவமானபடுத்தி உள்ளார்.

யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ரிசேர்ட் முழுமையான சிங்கள மயப்படுத்தலாக அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழியே இல்லாத நல்லிணக்க பாதயாத்திரை?

ஊடக அமைச்சர் வருகை தந்த போது யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ரிசேர்ட் முழுமையான சிங்கள மயப்படுத்தலாக அமைந்துள்ளது.

எனினும் இந்த ரிசேர்ட் பற்றி யாழ்.ஊடகவியலாளர்கள் சிலர் ரிசேர்ட் தொடர்பில் உள்நோக்கம் அறியாமல் அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஊடக அமைச்சர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தார்.

இதன் போது தென்பகுதி ஊடகவியலாளர்களும் வருகை தந்திருந்தனர்.

இதன் போது மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ரிசேர்ட்டும் அவர்களால் விநியோகிக்கப்பட்டு இருந்தது.

a93f7120079bf08dce2cd7f97d6cd550_Lஅதில் சிங்கள எழுத்துக்களால் எழுதப்படும், சிங்கத்தின் வாழ் போன்ற சின்னம் அச்சிடப்பட்டும் உள்ளது.

இதனை தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் சிலரினால் அணிய கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய பூங்காவில் அமைக்கப்பட்ட நினைவு தூபியும் முழுமையாக சிங்கள எழுத்தினால் எழுதப்பட்டும் உள்ளது.

ஆகையால் இது தொடர்பில் தமிழ்த்தேசத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர்களும் துணை போனால் பாரிய இழப்பை தமிழ் தேசம் சந்திக்க நேரிடும் என்பதனால்,

உடனடியாக இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். மேலும் பத்திரிக்கை நிறுவனங்களும் இது தொடர்பில் தார்மீக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஆயிரம் ஆயிரம் உயிர்கள் செத்து மடிந்த இந்த மண்ணில் இவ்வாறான தவறுகளை ஊடகங்களே அனுமதிக்கலாமா? சிந்தியுங்கள்.

“வாருங்கள் ஒன்றா சுவாசிப்போம்” என சிங்களத்தில் மட்டும் பொறிக்கப்பட்ட தூபியே இதுவரை காலமும் உயிர் நீத்த தமிழ் மொழிக்காகவும் தமிழ் உணர்விற்காகவும் மடிந்த ஊடகவியலாளர்களுக்கு செலுத்திய மரியாதை இதுதானா என மூத்த ஊடகவியலாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

யாழ் ஊடக அமையத்தினரின் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்ட ஊடக அமைச்சரும் வட மாகாண முதலமைச்சரும் இணைந்து திறந்து வைத்த நினைவுத் தூபியின் அவலம் இது தான் என மனம் நோகின்றனர் ஏனைய ஊடகவியலாளர்கள்.

20160328_171254-450x270யாழ் குடாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உள்ளபோதும் சுமார் 20 பேர் மட்டும் முன்னின்று நடாத்திய இந்த நிகழ்வின் மூலம் மரணித்த ஊடகவியலாளர்களுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளதா அல்லது இருந்த பெருமை விலைபோன ஒரு சில ஊடகவியலாளர்களினால் அழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

பிறரின் நிகழ்வுகள் சம்பவங்களில் குற்றம் காண முனையும் இந்த ஊடக வியலாளர்கள் தமது செயலை யாரும் குற்றம் கானமுடியாது என்ற என்னப்பாட்டினில் அமைச்சரினதும் ஆளும் அரசினதும் விசுவாசத்தினைப் பெறுவதற்காக செய்த சதியாகவே கருதுகின்றனர்.

மரணித்த ஊடகவியலாளர்களில் சிங்கள மொழி ஊடகவியலாளர்களும் உள்ளடக்கம் என்பதனால் சிங்கள மொழியிலும் எழுதியுக்கலாம் ஆனால் கண்டிப்பாக தமிழ்மொழியிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இதன் மூலம் அரசின் கபட நாடகத்திற்கு யாழ் ஊடக அமையத்தினரும் ஊதுகுழலாக மாறுகின்றனரா என்ற அச்சமும் நிலவுகின்றது.

இச் செயல் எதிர் பாராத விதமாக நடந்திருப்பின் இதுவரை எந்த செய்தியும் வெளிவரவில்லை.

இச் செய்தி வெளிவரும் சந்தர்ப்பத்தில் அதனை உடைத்து மாற்றக்கூடும் என்பதற்காக தூபியின் புகைப்படத்துடன் பிரசுரிக்கின்றோம்.

20160328_171214-450x270யுத்தகாலத்திலும் இறுதி யுத்தத்திலும் தழிழ் மொழிக்காக இறுதி இலட்சியத்திற்காக பணிபுரிந்த செய்தியாளர்களின் தூபியிலேயே மொழித் திணிப்பிற்கு துணைபோன யாழ் ஊடகவியலாளர்களே தற்போதும் புலம்பெயர் நாடுகளில் இருந்து இயங்கும் உணர்வு மிக்கது என கூறும் இணையங்களின் செய்தியாளர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென் இலங்கையில் இருந்து கூட்டி வரபட்டவர்களில் பலர் ஊடகத்துறையினர் இல்லை. முன்பு மகிந்த அரசில் தமிழ் இனப்படு கொலைகளை நியாபடுத்தியவர்கள் ஊடகத்துறைபோல கூட்டி வரபட்டு யாழ் குடாநாட்டில் அவர்களை தயாபரன் மற்றும் மதன் போன்ற தமிழ் இனத்துரோகிகள் மதிப்பளிப்பது மன்னிக்க முடியாத குற்றம்.

தென் இலங்கை மகிந்த குழுவின் அடிவருடியாக தயாபரன் செயற்படுகின்றார் என்பதுவும் யாழ் ஊடக மையம் என்பது மகிந்த அரசின் மறைமுக தமிழ் ஊடகத்துறையினை நசுக்க தயாபரனால் நடாத்தபடும் போலி அலுவலகம் என்பதுவும் தற்போது தெரிய வந்துள்ளது.

srilanka-mideaministry-280316-seithy (3)

மகிந்த அரசால் போலி புலிகள் அமைப்பு இயக்கபட்டு வந்தது. அந்த போலி புலிகள் அமைப்பின் இணைய செய்தியாளனாக தயாபரன் இருந்து வரகின்றார் என்பது உலகறிந்த உண்மையாகும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Comments are closed.