யாழ், மிருசுவில் தேவாலயத்தில் திருட்டில் ஈடுபட்டவர் பிடிபட்டார்

மிருசுவில் தேவாலயத்தில் திருட்டில் ஈடுபட்டவர் பிடிபட்டார்.
தென்மராட்சி, மிருசுவில் புனித நீக்கொலார் தேவாலயத்தில் நீண்ட நாட்களாக திருட்டில் ஈடுபட்டுவந்த திருடன் இன்று 27.07.2017 காலை திருட்டு முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை சீசீரீவி கண்காணிப்புக்கமராவின் உதவியுடன் மிருசுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் உடனடியான தேவாலயம் சுற்றிவளைக்கப்பட்டு திருடன் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பங்குத்தந்தையால் கொடிகாமம் பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டு கொடிகாமம் பொலீசார் கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக பொலீஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
இத்திருடன் பளை – புலோப்பளை பிரதேசத்தைச்சேர்ந்த கொன்சன் பிரதாப் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது அத்துடன் தென்மராட்சி மற்றும் பளைப்பிரதேசங்களில் அண்மைக்காலங்களில் நடைபெற்ற திருட்டுச்சம்பவங்களுடன் இத்திருடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதனால் அந்தவகையில் பொலீசார் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
சந்தேகநபரின் உள்ளாடைக்குளிலிந்து கஞ்சா போதைப்பொருளும் பொலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*