சாவகச்சேரியில் பொலிஸாரின் ரயரை திருடியவர்கள் கைது

சாவகச்சேரிப் பகுதியில், பழுதடைந்த வாகனம் திருத்தும் கடையில் ரயர்கள் திருடிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதை உடையவர்களே கைது செய்யப்பட்டனர்.

தமது வாகனத்தின் ரயரினை பழுது பார்ப்பதற்காகக் குறித்த கடையில் கொடுத்த பொலிஸார் நேற்று அதனைப் பெற்றுக் கெள்வதற்குச் சென்றபோதே ரயர் திருடு போயுள்ளமை தெரிய வந்தது.

இதன் பிரகாரம் அந்தப் பகுதியில் உள்ள வேறு கடை ஒன்றினில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி கமராவை பொலிஸார் பார்வையிட்டனர்.

இதன்போதுதான் தமது ரயரோடு சேர்த்து உழவு இயந்திரத்தின் ரயர் ஒன்றும் திருடப்பட்டதை அவதானித்த பொலிஸார், அவர்கள் இருவரையும் இன்றைய தினம் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*