காதைக் கிழித்து தோட்டை பிடுங்கினர்; அராலியில் சம்பவம்

நள்­ளி­ர­வில் வீடு புகுந்த கொள்­ளை­யர் குடும்­பத் தலை­வ­ரை­யும் அவ­ரது மனை­வி­யை­யும் கட்டி வைத்து வாய்க்­குள் துணி திணித்துப் பல பவுண் நகை­களைத் திரு­டி­னர். போதா­தென்று குடும்­பப் பெண்­ணின் காது­க­ளைக் கிழித்­துத் தோடு­க­ளை­ப் பிடுங்கிச் சென்­ற­னர்.

குரு­திப் பெருக்­கால் பெண் மயங்­கி­னார்.காலை­யில் பால் கொண்டு சென்­ற­வரே அவர்களைக் கண்டு வைத்­தி­ய­சா­லை­யில் சேர்த்­தார்என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த மோச­மான சம்­ப­வம் அராலி வட்­டுக்­கோட்­டை­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றது. இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

குறித்த குடும்­பத் தலை­வ­ரும் தலை­வி­யும் மட்­டும் வீட்­டில் வசிக்­கின்­ற­னர். பிள்­ளை­கள் வெளி­நாட்­டில் உள்­ள­னர். நள்­ளி­ர­வில் ஓடு பிரித்து உள்ளே இறங்­கிய கொள்­ளை­யர்­கள் வீட்­டுக்­குள் இருந்த இரு­வ­ரை­யும் கையில் அகப்­பட்­ட­வற்­றால் கட்­டிப்­போட்­ட­னர். அவர்­கள் சத்­த­மிட்டு அய­ல­வரை அழக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக அவர்­க­ளது வாய்க்­குள் துணி­க­ளைத் திணித்­த­னர்.

அங்கு சல்­லடை போட்­டுத் தேடு­தல் நடத்தி ஏரா­ள­மான நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­த­னர். இறு­தி­யில் குறித்த குடும்­பப் பெண்­கா­தில் அணிந்­தி­ருந்த தோடு­க­ளைக் கண்­டுள்­ள­னர். அத­னைக் கழற்றி எடுக்­காது காதோடு இழுத்­துள்­ள­னர். அத­னால் இரண்டு காது­க­ளும் கிழிந்து தொடு­கள் விடு­பட அவற்­றைக் கொண்டு கொள்­ளைக் குழு தப்­பிச் சென்­று­விட்­டது. காது கிழிந்­த­தால் குரு­திப் பெருக்கு ஏற்­பட்­டது.

சிறிது நேரத்­தில் குடும்பத்தலைவி மயங்கி விட்டார். குடும்­பத் தலை­வர் வாய்க்­குள் துணி திணிக்­கப்­பட்­ட­தா­லும் கட்­டிப் போடப்­பட்­ட­தா­லும் வேத­னை­யால் தவித்­துக் கொண்­டி­ருந்­தார். நேற்­றுக்­கா­லை­வரை சம்­ப­வம் எவ­ருக்­கும் தெரி­யாது.

காலை­யில் வழ­மை­போன்று அங்கு பசுப்­பால் கொண்டு சென்­ற­வர் வீட்­டுக்­கா­ரரை அழைத்­த­போது எந்­தப் பதி­லும் இல்லை. சந்­தேக்ில் உள்ளே சென்­று­பார்த்­த­போதே நிலை­மை­யைக் கண்டு பத­றிப்­போ­னார். உட­ன­டி­யாக அந்த வீட்­டுக்கு அய­லில் வசித்­த­வர்­களை அழைத்து குடும்­பத் தலை­வ­ரை­யும் மயங்­கி­ய­படி காணப்­பட்ட குடும்­பத் தலை­வி­யை­யும் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்த்­த­னர்.

நேற்று முற்­ப­க­லுக்­குப் பின்­னர் குடும்­பப் பெண் கண்­வி­ழித்­தார். பின்­னர் வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்று இரவு முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

சுமார் 3 பேர் வரை­யில் கொள்­ளை­யர்­கள் காணப்­பட்­ட­னர் என்று கூறுப்­பட்­டுள்­ளது. பல பவுண் நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன என்று கூறப்­பட்­டுள்­ளது. விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கப் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

 

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*