வித்தியா கொலையின் வெளிவராத விசேட புலனாய்வு அறிக்கை

வித்தியா வழக்கைத் திசை திருப்பி நீதிமண்ற தீர்ப்புகளை குழப்பும் நோக்குடன் முன்னால் வடமாகாண போலிஸ் மா அதிபரின் சட்டத்தரணி ஊடாக மகிந்த றாஜபக்சவுக்கு ஆதரவான கும்பல் ஒண்றினால் அமைச்சர் விஜயகலாவுக்கு சதி செய்யப்பட்டமை அம்பலமாகி உள்ளது.

2015ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சட்டத்தை மதித்து நடக்குமாறு , சுவிஸ் குமாரை கைது சைய்து நீதிமண்றில் நிறுத்துமாறே மக்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்துவிட்டு வந்துவிட்டார்.

வித்தியாவுக்கு நீதிகேட்டுப் போராடும் அமைச்சர்மீது அவதூறு பிரச்சாரம்

சுவிஸ் குமார் என்பவரை வீதியில் தெருவில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்து கொலை செய்துகொண்டு இருந்தார்கள்.

சம்பவத்தை கேள்விப்பட்ட அமைச்சர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது அவனை மக்கள் அடித்து கொலை செய்யக்கூடாது.

அவனைவைத்து அவனுடன் கூடவே குற்றம் செய்த மேலும் 07 பேரைப் பிடிக்கவேண்டும் ஆகவே போலிசாரிடம் பாரபடுத்துங்கள் என்று மக்களுக்கு உத்தருவு கொடுத்தார்.

அடித்தவர்களை மேலும் அடிக்கவிடாமல் ஆலோசனை கூறி அனைவரையும் நிலத்தில் உக்காரவைத்தார்.

சுவிஸ்குமார் தப்பி ஓடாதபடி மக்கள் அனைவரையும் சுவிஸ் குமாரை சுற்றி உக்காரவைத்தார்.

சுவிஸ் குமாரை விடுவிக்கும்படி அவர் எந்த சந்தர்பத்திலும் பொது மக்களையோ போலிசாரையோ கோரவில்லை. சுவிஸ் குமாரை கைது சைய்து நீதிமண்றில் நிறுத்துமாறே கோரி உள்ளார்.

அதற்குப் பின்னரான காலபகுதியில் நடந்தவை இவை.

மேற்படி சுவிசில் இருந்து சென்ற பிரகாஸ் அல்லது குமார் எனப்படும் சிவகுமார் ஆட்டோ ஒன்றில் கொழும்புக்கு செல்ல இருந்தவேளை, பொதுமக்களினால் வேலணைப் பகுதியில் பிடித்து, மின்கம்பத்தில் கட்டி வைத்திருந்த போது உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்த வேலணை பிரதேசசபை தலைவர் தவராசா (EPDP) தலையிட்டு மக்களிடையே சமரசத்தை ஏற்படுத்தி சுவிஸ் குமாரை பொறுப்பெடுத்திருந்தார்.

இதேவேளை, கடந்த 17 ஆம் திகதி இரவு மக்களால் சந்தேகநபராக பிடிக்கப்பட்ட சுவிஸ் குமார் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். இதுக்கு முதல் இரண்டு நாட்களும் வேலணை வங்காலவடியிலும், பின்னர் புங்குடுதீவிலும் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டவர் எவ்வாறு தப்பிச் சென்றார்?

வித்தியா, கொலை செய்யப்பட்ட பின்னர் பிரதான சந்தேகநபரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து பின்னர் பொலிஸில் ஒப்படைக்கவிருந்தனர்.

May 17, 2015 ஆம் திகதி சுவிஸ் குமார், மக்களால் பிடிக்கப்பட்டு சந்தேக நபராக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என பொலிஸாரின் முதல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் மீண்டும் அவர் வெள்ளவத்தை பொலிஸாரினால் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வைத்து May 19, 2015 ஆம் திகதி கைது செய்யப்பட்டார் என்றும் முதலறிக்கையில் குறிப்பிட்டு பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.

அதற்கமைய 18, May 2015 ஆம் திகதி குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் இருந்தார் என்பது  உறுதிப்படுத்தியுள்ளன.

எனினும் அவர் குற்றவாளி இல்லை என்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே தாம் சுவிஸ் குமாரை பொலிஸ் நிலையத்தில் வைத்திருப்பதாகவும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் 19, May, 2015 ஆம் திகதி வெள்ளவத்தையில் நடமாடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. அதனையடுத்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டன.

அதன்படி 19,May 2015 துவாரகேஸ்வரன் என்பவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் வெள்ளவத்தைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பிரகாஸ் அல்லது குமார் எனப்படும் சிவகுமார் என்பவரை, பொலிசாரிடம் ஒப்படைப்பதாகக் கூறி சட்டத்தரணி திரு.வி.ரி. தமிழ்மாறனால் அழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், இதனையடுத்து புங்குடுதீவு பொதுமக்களினால் சட்டத்தரணி திரு.வி.ரி. தமிழ்மாறன், பிடிக்கப்பட்டு புங்குடுதீவு சர்வோதய மண்டபத்துக்குள் அடைத்து வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வருவதாகவும், இதேவேளை இவர் சுவிசுக்கு தப்பி செல்லும் நோக்கில் இருந்தவேளை வெள்ளவத்தை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இருப்பினும் மேற்படி பிரகாஸ் அல்லது குமார் எனப்படும் சிவகுமார் என்பவரை, தம்மிடம் அதாவது புங்குடுதீவு கொண்டுவந்து, தமக்கு முன்னாள் பொலிசாரிடம் ஒப்படைக்கும் வரை சட்டத்தரணி திரு.வி.ரி. தமிழ்மாறனை, தாம் விடுவிக்க மாட்டோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிலும் குறிப்பாக கொழும்பிலிருந்து திடீரென யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரபல சட்டத்தரணியும், சட்ட விரிவுரையாளருமான வி.ரி.தமிழ்மாறன் இதில் நேரடியாகவே தலையீடு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் பகிரங்கமாக தன்னிடம் குற்றம் சுமத்தியுள்ளனர் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

இன்று 19.05.2015 செவ்வாய்க்கிழமை புங்குடுதீவு சர்வோதயத்தில் இடம்பெற்ற பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையிலான சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

May 19, 2015 பிரகாஸ் அல்லது குமார் எனப்படும் சிவகுமார் என்பவரை, பொலிசாரிடம் ஒப்படைப்பதாகக் கூறி சட்டத்தரணி திரு.வி.ரி. தமிழ்மாறனால் அழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், இதனையடுத்து புங்குடுதீவு பொதுமக்களினால் சட்டத்தரணி திரு.வி.ரி. தமிழ்மாறன், பிடிக்கப்பட்டு புங்குடுதீவு சர்வோதய மண்டபத்துக்குள் அடைத்து வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வருவதாகவும், இதேவேளை இவர் சுவிசுக்கு தப்பி செல்லும் நோக்கில் இருந்தவேளை வெள்ளவத்தை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இருப்பினும் மேற்படி பிரகாஸ் அல்லது குமார் எனப்படும் சிவகுமார் என்பவரை, தம்மிடம் அதாவது புங்குடுதீவு கொண்டுவந்து, தமக்கு முன்னாள் பொலிசாரிடம் ஒப்படைக்கும் வரை சட்டத்தரணி திரு.வி.ரி. தமிழ்மாறனை, தாம் விடுவிக்க மாட்டோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

May 22, 2015 பெற்றோர்கள் பிள்ளையைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறையிட்ட உடனேயே அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், மாணவி வித்தியாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

May 22, 2015 சந்தேகநபர்களைக் கைது செய்வது, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவது, விசாரணை செய்வது என்பன பொலிஸாரின் பணி. அதனை பொலிஸார் செய்து வருகின்றனர். யாரும் சட்டத்தை கையில் எடுத்து சட்டத்துக்கு முரணாக செயற்பட்டால் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.

May 23, 2015 புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையில் உண்மைகளைக் கண்டறிவதற்கு பொலிஸார் கடமைகளைச் சரிவர செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

May 24, 2015 படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு ஆதரவாக கொழும்பில் அமைதி பிரார்த்தனை புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்காக இன்று மாலை 6.30 அளவில் அமைதியாக சோகத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வொன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா பெயரில் கூட்டமைப்பு கடைசியாக விடுத்துள்ள அறிவித்தலில் ஒரு முக்கிய பகுதி இப்படி இருக்கிறது.

“………(19.05.2015) நண்பகல் 12.00 மணிக்கு அந்த மாணவியின் இல்லத்தில் தாயார் உறவினரைச் சந்திக்க நானும், கல்வி அமைச்சர், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சென்றிருந்தோம். அதற்கிடையில் புங்குடுதீவு சர்வோதய மண்டபத்தில் ஒரு மக்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்த அங்கு சென்றோம்.

அங்கு எம்மைச் சந்தித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சுவிசில் வாழும் குமார் என்பவர் கொழும்புக்கு தப்பிவிட்டதாகக் கூறினர்.

திரு. துவாரகேஸ்வரன் என்னிடம் வந்தார். குமார் என்பவர் பலாலி விமானத்தளத்திலிருந்து கொழும்பு செல்ல முயற்சிக்கிறார். இதைத் தடுத்து நிறுத்திக் கைது செய்ய வேண்டும். மண்டபத்தில் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிற்கின்றார்.

நீங்களும் வாருங்கள் என அழைத்த போதுதான், நானும் மண்டபத்துக்குள் சென்று பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் வாதாடினோம். அவர் சாட்சியமொன்றைத் தருமாறு கோரினார். அப்பொழுது அந்த குமார் என்பவர் கொழும்பில் நிற்பதாக ஒரு செய்தி வந்தது.

அதை அறிந்தும் துவாரகேஸ்வரன் என்னுடன் ஆலோசித்து, ஒரு முறைப்பாட்டை எழுதி பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் கையளித்தார். சில நிமிடங்களில் பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்மிடம் “கொழும்பில் அந்த நபர் கைது செய்யப்பட்டுவிட்டார்” என்றார். அவரை யாழ்ப்பாணத்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் என்று வாதாடினோம். அதற்கு பிரதி பொலிஸ் மாஅதிபர் உடன்பட்டார்.

May 26, 2015 புங்குடுதீவில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விசேட நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 13.04.1976

2. பூபாலசிங்கம் உதயகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 14.08.1981

3. பூபாலசிங்கம் சசிகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் பிறந்த திகதி 29.07..1984

4. மகாலிங்கம் சசிந்தன் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 25.05.1984

5. தில்லைநாதன் சந்திரகாந்தன் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 13.08.1983

6. சிவதேவன் துசாந்தன் – புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 06.03.1991. இவர் வேலணைப் பிரதேச சபையில் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.

7. நிசாந்தன் என்னும் பரணி ரூபசிங்கம் குகநாதன் – புங்குடுதீவ பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 28.04.1989 இவர் வசிக்குமிடம் நாவலசிங்கராம மாவத்தை, மோதறை, மட்டக்குளி என்னும் கொழும்புப் பகுதியாகும்.

8. ஜெயரட்ணம் கோகுலன் (கண்ணா) – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 05.02.1989 இவர் வசிக்குமிடம் கிறீன் ரோட், கொட்டாஞ்சேனை, என்னும் கொழும்புப் பகுதியாகும்.

9. சுவிஸில் பிரகாஸ் எனவும் புங்குடுதீவில் குமார் எனவும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 06.10.1971 இவரது வழக்கு இல:B.116/ 2015

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கிய சந்தேகநபரான வேலணைப் பிரதேச சபையில் ஓட்டுனராக கடமையாற்றுகின்ற புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவதேவன் துசாந்தன் என்பவரது தொலைபேசிப் பதிவேடு மற்றும் சம்பளப் பதிவேடு உள்ளிட்ட சில ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனை நாம் இங்கு பதிவேற்றியுள்ளோம்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*