நெடுந்தீவு ஞா.ஹம்சிகாவின் கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஆர்.சபேசன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களில் வழக்கிற்கு சம்பந்தப்படாத பொருட்கள் அவர்களுடைய உறவினர்களிடம் கடந்த தவணை ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறையில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கர்ப்பிணிப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*