தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அதிபரின் அசமந்தப் போக்கு

கடந்த வெள்ளிக்கிழமை[28,07,2017] அன்று பாடசாலை முடிந்து மாணவர்கள் வெளியேறி பாடசாலையின் வெளிப்புறத்தில் வைத்து க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவன் 8ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார் இதில் முகத்தில் பலமாக அடிபட்ட மாணவன் தலை சுற்றி ஒரு பக்க காதும் கேக்காத நிலையில் அப்படியே அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார் பின்னர் சிறிதுநேரம் கழித்து சகமாணவர்களின் உதவியுடன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டது பின்னர் மேற்படி பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்கு அருகில் வசித்து வருகின்றார் அவரிடம் தாயார் மாணவனையும் அழைத்துச் சென்று காண்பித்தார் உடனே அந்த ஆசிரியர் வேறு ஆசிரியர்களுக்கு சம்பவத்தை தொலைபேசியில் கூறினார் .

பின்னர் மாணவனின் தாயாரை திங்கட்கிளமை பாடசாலைக்கு வரும்படி கூறினார் அதன்படி நேற்று 31/07/2017 மாணவனின் தந்தை அதிபரை சந்தித்து உரையாடிய போது அதிபர் வாசலுக்கு வெளியில் நடக்கும் பிரச்சினைகளுக்கு நாம் பொறுப்பில்லை என்றும் உங்கள் மகன் ஏதும் செய்யாமல் அவர் அடித்திருக்க மாட்டார் என்று கூறினார்.

அதற்கு ஏனைய ஆசிரியர்கள் மற்றும் காவலாளி ஆகியோர் அடிவாங்கிய மாணவர் மிகவும் சாதுவானவர் மிகவும் ஒழுக்கமானவர் என்று கூறியும் அதிபர் அவர்கள் கூறியதை செவிமடுக்காது வெளியில் போகுமாறு மாணவனின் தந்தையை விரட்டி விட்டார்.

இது தொடர்பாக எமது செய்தியாளரின் தேடலின் பிரகாரம் அடித்த மாணவன் அதிபரின் உறவுக்காரர் என்றும் சுன்னாகம் புதிய சந்தை கட்டடத்தில் பிரபல புடவை கடை வைத்திருப்பவரும் நாணயம் மாற்றுபவர் என்றும் திரியவந்துள்ளது .

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அவர்களின் பெயர்கள் பிரசுரிக்கப்படவில்லை.

உரியவர்கள் தத்தமது கடமைகளை சரியாக செய்யாத பட்சத்திலேயே குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*