நயினாதீவில் நாளை தனியார் படகு உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

தென்னிலங்கை அரசியல் சக்திகளின் பின்புலத்தை கொண்டு நயினை படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் தனியார் நிறுவனம்.

நயினாதீவில் அன்று தொட்டு இன்றுவரை நயினாதீவுப் பிரதேசத்தை சார்ந்த உரிமையாளர்களின் படகுகள் மட்டும் மக்களின் போக்குவரத்துச் சேவையில் நயினாதீவு -குறிகட்டுவான் இடையில் 5 ரூபாயில் ஆரம்பமாகி தற்போது 30 ரூபா மட்டும்
அறவிடப்பட்டு சேவையில் ஈடுபடும் வேளையில், எமது பிரதேசத்திற்கு அப்பாற் பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து
தற்போது ஒரு சிறிய ரக படகு, 10 பயணிகளை ஏற்றி இறக்கும் படகு, பிரதேச செயலகத்திடமோ பிரதேச சபையிடமோ அனுமதி பெறாது அத்துமீறிய செயலுடன் 3000/- அறவிட்டு சேவையில் ஈடுபடுவதால் அதனை கண்டித்தும் தொடர்ந்தும் அதனை அனுமதிக்காது அதனை வெளியேற்றக்கோரியும் இருந்து [02.08.2017]புதன் கிழமையில் இருந்து தனியார் படகு உரிமையாளர்கள் தமக்கு சாதகமான முடிவு வரும் வரை பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதனால் ஏற்படும் விளைவுகளுக்காக மக்களிடம் தமது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.

எமது அயல் தீவுகளில் இருந்து இதுவரை காலத்திற்கு எந்தப் படகுகளும் நயினாதீவு குறிகட்டுவான் பகுதியில் சேவையில் ஈடுபடுவதில்லை என்பது யாவரும் அறிந்த விடயம்.

எனவே எமது பிரதேசத்திற்கு அப்பாற் பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து வந்து அத்து மீறி பயணிகளை ஏற்ற ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்பதுடன் மேலும் சில படகுகள் அவர்களால் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது , எனவே இவ் விடையம் தொடர்பான சம்பந்தப்பட் ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து இச் சேவையினை தடுத்து நிறுத்தி வழமையான படகுப் பயண சேவையினை தொடர அனுமதிக்க வேண்டுமென தனியார் படகு உரிமையாளர்களும் பிரதேச மக்களும் கேட்டுக் கொள்கின்றனர் .

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*