வடக்கு நீதிவான்களுக்கு எதிராக பொலிஸார் முறையீடு!

வடக்கு மாகா­ணத்­தில் பணி­யாற்­றும் நீதி­வான்­ ­ளுக்கு எதி­ரா­கப் பொலிஸ் திணைக்­க­ளத்­தால் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பா­டு­கள் செய்­வது அதி­க­ரித்­துள்­ளது.

பொலிஸ் அதி­கா­ரி­கள் பெரும்­பா­லும் சிங்­க­ள­வர்­ ­களா­க­வும் நீதி­வான்­கள் அனை­வ­ரும் தமிழ்­பே­சு­வோ­ரா­க­வும் இருக்­கும் நிலை­யில் இத்­த­கைய முறைப்­பா­டு­கள் இன ரீதி­யான பாகு­பாட்டு அணு­கு­மு­றை­யைக் கொண்­டதா என்­கிற சந்­தே­கம் வலு­வா­னது என்று மனித உரிமை ஆர்­வ­லர்­கள் தெரி­விக்­கின்­ ­றனர்.

மன்­னார், கிளி­நொச்சி மற்­ றும் ஊர்­கா­வற்றுறை நீதி­ப­தி­க­ளுக்கு எதி­ராக பொலிஸ் திணைக்­க­ளம் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வில் முறை­யிட்­டுள்­ளது.

மன்­னா­ரில் திருக்­கே­தீஸ்­வ­ரம் அருகே கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மனி­தப் புதை­குழி தொடர்­பான விசா­ர­ணை­யில் நீதி­வா­னுக்கு எதி­ரா­கப் பொலி­ஸார் முறை­யிட்­டி­ருந்­த­னர்.

இது தொடர்­பான பிணக்­கால் கடந்த தவணை இந்த வழக்கு விசா­ரணை இடம்­பெ­ற­வில்லை.

புதிய தவ­ணை­யிட்டு வழக்­கைத் தள்ளி வைத்­து­விட்­டார் நீதி­வான்.

இந்த நிலை­யில் கிளி­நொச்சி மற்­றும் ஊர்­கா­வற்­துறை நீதி­வான்­க­ளுக்கு எதி­ரா­க­வும் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கப் பொலிஸ்மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­தார்.

கிளி­நொச்­சிக்கு கடந்த செவ்­வாய்க் கிழமை சென்­றி­ருந்த பொலிஸ் மா அதி­பர் பூஜித், சிவில் பாது­காப்­புக் குழுக்­க­ளின் தலை­வர்­க­ளைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார்.

கிளி­நொச்சி மற்­றும் ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்ற நியா­யா­திக்க எல்­லைக்­குள் நடந்த இரு திருட்­டுக்­கள் தொடர்­பில் கைதான சந்­தே­க­ந­பர்­கள் விடு­விக்­கப்­பட்­டமை குறித்­துக் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்­குப் பதி­ல­ளித்த பொலிஸ் மா அதி­பர், மேற்­படி இரு சம்­ப­வங்­கள் தொடர்­பி­லும் பொலிஸ் திணைக்­க­ளத்­தி­னால் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­வி­டம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­தார்.

‘‘பொலி­ஸார் தமது கட­மையை ஒழுங்­கா­கச் செய்­வ­தற்­குத் தவ­றி­விட்டு, நீதி­வான்­க­ளுக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­வது ஏற்­கக்­கூ­டி­ய­தல்ல.

முழு­மை­யான சாட்­சி­யங்­க­ளை­யும் சரி­யான குற்­ற­வா­ளி­க­ளை­யும் பொலி­ஸார் மன்­றில் முற்­ப­டுத்­தி­னால் நீதி­வான்­கள் ஏன் அவர்­க­ளுக்­குப் பிணை வழங்­கப்­போ­கி­றார்­கள்’’ என்று தெரி­வித்­தார் மனித உரி­மை­கள் சட்­டத்­த­ரணி ஒரு­வர்.

இதை அவர்­கள் திட்­ட­மிட்டு வேண்­டும் என்றே மேற்­கொள்­கி­றார்­களோ என்­றும் சந்­தே­கிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*