கதிரை கொடுத்த அருந்தவபாலனுக்கு கம்பி நீட்டிய அப்புக்காத்து சுமந்திரன் M.P.

சாவகச்சேரி பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதும் அதை ஏன் இன்னமும் நடைமுறையாகவில்லை என்றும், தற்போது அரசுடன் ஒட்டியுறவாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின் தோல்வியடைந்ததாக சொல்லப்பட்ட அருந்தவபாலன் அப்புக்காத்து சுமந்திரனை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.

தன்னை நோக்கி சம்பந்தன் கூட கேள்வி கேட்பதில்லை என்ற மமதையில் இருக்கும் அப்புக்காத்து சுமந்திரனுக்கு அருந்தவபாலன் தொடுத்த கேள்வியானது ஆட்டங்காணச் செய்துவிட்டது.அவையில் அவமானப்பட்ட அப்புக்காத்து சுமந்திரன் என்னிடம் இவ்வாறான கேள்வி கேட்க முடியாது என்றும் அவ்வாறு கேட்டால் கடும் நடவடிக்கைக்கு ஆளாகவேண்டிவரும் என்றும் அருந்தவபாலனை கடும் தொனியில் எச்சரிக்கை செய்ததுடன் மிரட்டியும் உள்ளார்.

கடந்த தேர்தலில் சாவகச்சேரி பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அக்களி அதிகவாக்ககளை பெற்று வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அருந்தவபாலனது வாக்குகளை மையப்படுத்தியே அப்புக்காத்து சுமந்திரன் சில திருவிளையாடல்களைச் செய்து நாடாளுமன்ற கதிரையை கைப்பற்றினார் என்று பரவலாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சாவகச்சேரி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒரே குட்டையை சேர்ந்த இரண்டு மட்டைகளும் முட்டிமோதியதானது பலருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் அதுவொன்றும் புதியதல்ல என்று சாவகச்சேரியில் இவ்விருவராலும் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுவரும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே அரசுடன் சரணாகதியடைந்து அரசியன் செல்லப்பிள்ளையாக இருந்துவரும் அப்புக்காத்து சுமந்திரன் தென்னிலங்கை அரசின் நிழ்ச்சி நிரலுக்கு அமைய முன்னாள் புலிகள் தன்னை கொல்ல எத்தனிக்கின்றனர் என கூறி சிலரை சிறைக்கு அனுப்பியிருந்தார். அவ்வாறான ஒரவர் தமிழ் மக்களை மிண்டம் ஒரு பதட்டமான நிலைக்க கொண்டுவரவதற்கான செயற்பாடுகளில் முழுமூச்சாக ஈடுபட்டுவருகின்றார் எனவும் சொல்லப்படுகிறது.

இத்தகைய ஒரவர் தமிழருக்க எப்படி நிரந்தர தீர்வை பெற்றுத்ருவார் என்ற கேள்வியும் தற்போது மக்களிடையே எழுந்துள்ள நிலையில் மக்களை தனது அதிகாரத்தை கொண்டு மிரட்டும் செயல்களில் சுமந்திரன் ஈடுபமட்டுவருவதும் அதிகரித்துள்ளது.

எது எப்படியோ தனக்கு கதிரை கொடுத்த அருந்தவபாலனுக்கு அப்புக்காத்து சுமந்திரன் கம்பி நீட்டிவியுள்ள நிலையில் அவரை நம்பி வாக்களித்த மக்களது நிலை பரிதாபமானது என்பதே உண்மை.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*