துன்னாலை பகுதி சுற்றிவளைப்பு: Police, STF க்கு மக்கள் பாராட்டு

யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும், பொலிசாரும் வீடு வீடாகச் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

துன்னாலை 07 ஹன்ரர், 15 மோட்டார் சைக்கிள்களும் மீட்பு, துன்னாலை வடக்கு , துன்னாலை கிழக்கு,  துன்னாலை மத்தி , துன்னாலை தெற்கு , துன்னாலை மேற்கு ஆகிய பகுதிகளில் பதிவற்ற மணல் கடத்தலுக்கு சும்மார் 90 வரையான ஹன்ரர் வாகனங்கள் பயன்படுத்தபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

மேலும் விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களில் அந்தப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (சனிக்கிழமை) காலை முதல் வீதிகளில் பெரும் எண்ணிக்கையான சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்து திருட்டு வேலைகளுக்கு பயன்படுத்தபட்ட 07 ஹன்ரர் ரக வாகனங்களும், 15 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Police, STF க்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். துன்னாலை பகுதியில் ஆடு மாடு கோழி என்று தினமும் இரவு நேரத் திருட்டுகளும் பகல் நேரத்தில் மணல் கடத்தல் மணலுக்குள் கஞ்சா கடத்தல் தென்ஆசியாவில் இருந்து வங்க கடல் ஊடாக ஆயுதம் கடத்தல் ஆட்கடத்தல் என்று துன்னாலைக்கும் தென்ஆசிய நாடுகளுக்கும் இடையில் கடத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில் தேடுதல் நடாத்தும் போலிசாருக்கும் விசேட அதிரடி படையினருக்கும் துன்னாலை மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய தேடுதல் ஊடாக மக்கள் நிம்மதியாக வாழமுடியும் என்று கருதுகின்றனர். போலிசார் தேடுதல் நடாத்தலாம் என்ற அச்சத்தில் நேற்றையதினம் பகல் கொடிகாமம் புகையிரத்தில் ஏறிய 80 துன்னாலை இளைஞர்கள் வன்னி மற்றும் தென்இலங்கை நோக்கித் தப்பி ஓடி உள்ளதாக புகையிரத ஊழியர் தெரிவித்தனர். இவர்கள் 80பேரும் போலிசாருக்கும் விசேட அதிரடி படையினருக்கும் இராணுவத்திற்கும் கடற்படைக்கும் கடந்த ஒரு மாதமாகத் தாக்குதல் நடாத்தி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*