பிணத்திற்கு பணம் அறவிடுகின்ற பருத்தித்துறை வைத்தியசாலை

இன்று 08 ஆவணி 2017 அன்று கரவெட்டி அத்துளு அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் பணக்கஷடம் காரணமாக தற்கொலைக்கு நஞ்சருத்திவிட்டு இறக்கும் தருவாயில் கிணற்றில் நீர் அருந்துவதற்காக சென்றபோது கிணற்றுக்குள் தடக்கி விழுந்து மரணத்தினை சந்தித்தார்.

இவரது உடல் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு இவரது மரணம் உறுதிசெய்யப்பட்டபின் பிரேத அறையில் வைக்கப்பட்டது.

இதன் பின் மரண விசாரணை நடாத்த வேண்டும் என வைத்தியசாலை நிர்வாகத்தினால் கூறப்பட்டது.

மரண விசாரணைக்கு பிற்பகல் 5.00 மணிவரை எந்த மரண விசாரணை வைத்தியரும் சமூகம் அளிக்கவில்லை.

இது தொடர்பாக அங்கு பிரேத அறையில் வெள்ளை சீருடை அணிந்த இருவர் காணப்பட்டார்கள்.

அவர்களுடம் கேட்டபோது இதற்குரிய பணம் செலுத்திவிட்டீர்களா எனக்கேட்டார்கள், என்ன பணம் எனக்கேட்டபோது எமக்கு ரூபா 10 000 மும் அங்கு ஓவசியர் அம்மாவுக்கு 5 000 கெர்டுத்தால் மட்டும் உங்கள் போடியை கொண்டுபோக அனுமதிப்போம் என்றார்கள்.

இதற்கு எனது நண்பர் தனது மாமனார் இறந்த கவலையில் அவர்களுடன் முரண்பட்டார், அதற்கு அவர்கள் இதுதான் எமது நடைமுறை உரிய இடங்களுக்கு காசு கொடுத்தால்தான் தருவோம் என்று, இது நீண்டகாலமாக இதுதான் முறை என்று கத்தினான்.

இதை பொறுக்கமுடியாது அங்கு நின்றவர்கள் நாங்கள் ஓவசியருடம் கதைப்போம் என்று சொல்லி அங்கு சென்றார்கள், அங்கு ஓவசியராக ஒரு பெண் இருந்தாள்;

அவளிடம் கூறியபோது அவள் சொன்னாள் அவர்கள் எல்லாம் சொல்லி இருப்பார்கள், அதுதான் நடைமுறை என்றாள் அதற்கு அவர்கள் இல்லை, இது தொடர்பாக வைத்தியசாலை பெரியவருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனக்கேட்டதற்கு நீங்கள் எவனுக்காவது சொல்லி ஒன்றும் பண்ணமுடியாது சுகாதார அமைச்சர் கூட லஞ்சம் வாங்கிதான் எல்லாம்….. என்று எழுந்து சென்று விட்டாள்.

அதற்கு அவர்கள் வைத்திய பெரியவரிடம் சென்றபோது அங்கு அவர் இல்லை இவ்வைத்தியசாலை உண்மையில் பிணத்திற்கு பணம் அறவிடுகின்றதா என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும்.

அல்லது இவ்விபகாரம் ஜனாதிபதி அவர்களுக்கு தெரியப்படுத்துவோம்.

பணம் அறவிடுகிறது என்றால் ஒவ்வொரு வயது பிணத்திற்கும் எவ்வளவு பணம் என்பதை சுகாதார அமைச்சரோ அல்லது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரியப்படுத்த வேண்டும் இல்லையேல் இவ் வைத்தியசாலையில் நடைபெறும் அனைத்து ஊழல்களையையும் வெளியிடுவோம்.

 

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*