யாழ் வடிவேலு வாய் திறந்தால் சிறை!!

போக்குவரத்து அனுமதி வழங்கும் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாகவும், கொழும்பில் வாகன தரிப்பிடத்தில் முறையற்ற விதத்தில் தனது வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த குற்றத்திற்காகவும் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டிருந்த துவாரகேஸ்வரன் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.

கடந்தவாரம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய, கைது செய்யப்பட்ட இவர் கடுமையான நிபந்தனைகளுடன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

துவாரகேஸ்வரனுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்த போதும், கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் பத்தாயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் இரண்டு சரீர பிணைகளிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், பொது இடங்களில் அவதானமாக செயற்படவேண்டும் மற்றும் கவனமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ள கூடாது போன்ற கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*