ஊடகவியலாளர்களுக்கு அச்சத்தை நீக்கியது நல்லாட்சியே – மங்கள

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் இந்த நல்லாட்சி அரசில் முற்றாக இல்லாமல் செய் யப்பட்டுள்ளது என நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சுங்கத்திணைக்களத்தின்  உப சுங்கத்தடுப்பு பிரிவு அலுவலகம் நேற்றைய தினம் தெல்லிப்பழையில் திறந்து வைக்கப்பட்டது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
நான் ஒரு இலங்கையனாக இருந்தும் தமிழ் மொழியினை பேச முடியாமல் சிங்களத்தில் உரையாற்றுவதையிட்டு வருத்தம டைகிறேன். வடமாகாண ஆளுநர் தமிழில் உரையாற்றும் போது என்னால் பேச முடியா மல் இருப்பது வேதனை அளிக்கின்றது.
நல்லிணக்கத்துக்காக பல காலம்  போரா டிவரும் ஒருவர் வடக்கு மாகாணத்திற்கு ஆளுநராக கிடைத்திருப்பது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.
மேலும் ஊடகவியலாளர்களின் சுதந்தி ரம் தொடர்பாக  அனைவருக்கும் தெரியும். தற்போது வெள்ளை வான் கடத்தல் இல்லை, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் இல்லை, அவர்கள் மீதான அச்சுறுத்தல்கள் இல்லை.
அவ்வாறான அனைத்து செயற் பாடுகளும் எமது  நல்லாட்சியில்  இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.
எந்த ஒரு உயர் அதிகாரியையும் விமர்ச னம் செய்யும் அளவுக்கு ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது.
எமது நல்லாட்சி அரசில் யார் பிழை செய்தாலும் அவர் எந்த அரசியல் தலைவராக  இருந்தாலும், பிழைகள் காணப்படும் இடத்து சிறப்பு குழு அமை க்கப்பட்டு அவர்கள் மேல் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
அதில் பிழைகள்  செய்தவர்கள் என இனங் காணப்படும்  நபர்கள் வீட்டுக்கு அனுப்பப்படு கின்றார்கள் அல்லது தண்டனை அனுபவிக் கின் றார்கள் இந்த நிலை தொடரும்.
கிணத்து தவளைகளின் சத்தங்களுக்கு நாம் செவி சாய்க்காது எல்லோரும் ஒன்றாக அபிவிருத்தியை நோக்கி பயணிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*