தெருச்சண்டியர்களாக இருந்த துன்னாலை இளைஞர்கள் இன்று பயங்கரவாதிகள்

வடமராட்சி யின் ஓர் அங்கமான துன்னாலைப் பகுதி தற்போது யாழ்ப்பாணத்தின் மிகவும் ஆபத்தான பகுதியாக மாற்றம்பெற்றுள்ளது. தெருச்சண்டியர்களாக இருந்த துன்னாலை இளைஞர்கள் இன்று பயங்கரவாதிகள் .

இதற்கு காரணம் அப்பகுதியில் மணல்கொள்ளை செய்யும் ஓர் அப்புக்காத்து நாடாளுமன்ற உறுப்பினரும் அவருக்கு கைக்கூலியாக இருக்கும் அவ் ஊரைச்சேர்ந்த அடாவடி வடக்கு மாகாண உறுப்பினரும் அவரது மகனும்தான் என்று பரவலாக பேசப்பட்டுவருகினறது.

தனது இன மக்களின் வாக்குகளில் வடக்கு மாகாண சபை உறுப்பினரான யோகத்தார் அம்மக்களை மறந்து தனது சுயநல புத்தியுடன் அவ்வூர் காணிகளை எல்லாம் தனது காணியாக உறுதிமுடித்து அட்டகாசம் செய்துவருகிறார் இதனை எதிர்த்து பொலிஸாரிடம் முறையிட்டால் பொலிஸாரும் யோகத்தாரின் கைக்கூலியாக உள்ளனராம் என கூறி அப்பகுதி மக்கள் வருத்தப்படுகின்றனர்.

யோகத்தாரும் ஆவரது அடாவடி பெடியனும் இணைந்து மணல்கொள்ளை அடித்துவரும் அப்புக்காத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அடியாளாக இயங்கி வருமானம் ஈட்டிவருகின்றனர். இதனால் வேறு நபர்கள் மணல் ஏற்றி விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் சில ஊர்ச்சண்டியர்கள் அங்கு மணல் ஏற்றி விற்பனைசெய்துவந்தனர். இதனை தடுக்க அப்புக்காத்து எம்.பி. பொலிஸாரைக்கொண்டு இளைஞர்களை அச்சுறுத்தினாராம்.

ஆனாலும் இளைஞர்கள் மணல் ஏற்றுவதை நிறுத்தவில்லை. இதனால் ஒரு உயிரை பலியெடுத்து மணல் ஏற்றுவதை தடுத்துள்ளனர் யோகத்தாரும் அவரது அடாவடி பொடியனும். இதையும் அப்பகுதி மக்கள்தான் எமக்கு எடுத்தச் சொல்லினர். இளைஞர் கொல்லப்பட்டதால் ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் ஒன்றுதிரண்டு அவ்வூரருகே இருந்த பொலிஸ் நிலையத்தை தகர்த்தெறிந்தனர். அதுமட்டுமல்ல பருத்தித்துறை ஆஸ்பத்திரியிலிம் பொலிஸாரின் வாகனத்தை உடைத்தெறிந்தனர். அத்தனைக்கும் தாம் சுட்டதே காரணம் என நினைத்து அடங்கி இருந்தனர் பொலிஸார்.

இந்நிலையில் இறந்த இளைஞனின் மரணவீட்டுக்கு அஞ்சலி செலுத்தச்சென்ற யோகத்தாருக்கு நல்ல வரவேற்பை அவ்வூர் இளைஞர்கள் கொடுத்து அனுப்பிவிட்டனராம். அவமானப்பட்ட யோகத்தார் தனது ஆட்டத்தை அப்பக்காத்து எம. பியைக் கொண்டு ஆரம்பித்துள்ளார் என்றும் அப்பகுதி மக்கள் சொல்லுகின்றனர். அதாவது இளைஞர்களின் தாக்குதல்களை பொருட்படுத்தாது பொலிஸார் இருப்பதை பொறுத்துக்கொள்ளதா யோகத்தாரும் அடாவடிம் பொடியனும் அப்புக்காத்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் பொலிஸாரை தூண்டிவிடும்படி எடுத்துச் சொல்லினர். கோபத்திலும் பொறுமை காத்த பொலிஸார் தமிழ் தரப்பு தட்டிவிட்டால் சும்மாவா இருப்பார்கள்? சில இளைஞரை பொலிஸாரை தாக்க ஏவிவிட்டு பழியை துன்னாலை இளைஞர்கள் மீது திசைதிருப்பிவிட்டனர்.

இங்குதான் யாழ்ப்பாணத்தின் இன்றைய பதற்றநிலை உருவாக்கப்பட்டது. அமைதியாய் இருந்த யாழ்ப்பாணம் மறுபடியும் இதனால் பயங்கரவாத நோய்க்குள்ளாகிவிட்டது. ஊரின் எல்லையில் முடங்கிக் கிடந்த படையினரை தட்டி எழுப்பி ஒவ்வொரு வீட்டின் படலைகுள்ளும் உள்நுழைய வைக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் நடமாடியதைப்போல் படையினரின் வாகனங்கள் எல்லா வீதிகளிலும் ஊர்ந்து திரிகின்றன. கனரக ஆயுதங்களை ஏந்தியபடி பச்சை உடுப்புக்கள் மறுபடியும் மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளன. சோதனைகள் என்ற போர்வையில் குடாநாடு மீண்டும் பயங்கரவாதம் என்னும் நாமத்தை சூடிக்கொண்டுள்ளது.

இதற்க யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களையும் வன்முறைகளையும் தான் காரணம் என்று சொல்லுகிறது அரசு. ரோட்டில் நின்ற குடிகாரன் ஒருவன் நல்லூரில் நீதிவான் இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்தே யாழ்ப்பாணத்திலும் வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் மீண்டும் அதிகாரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் சமூக விரோதச் செயற்பாடுகளும் வாள் வெட்டுக் குழுக்களின் நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் நல்லூர் சம்பவமானது வாள்வெட்டுக் குழுக்களுக்கு புதிய தன்னம்பிக்கையை கொடுத்ததாகவே அமைந்தது. அதாவது தமது துப்பாக்கிகளை கூட பாதுகாத்துக்கொள்ளவோ அன்றி அதை முறையாகப் பயன்படுத்த முடியாதவர்களாகவும் பொலிஸார் இருக்கின்றார்கள் என்பதையும் இதனால் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொள்வது இலகு என்ற துணிச்சலையும் இந்த நல்லூர் சம்பவம் வாள்வெட்டுநருக்கு கொடுத்தது.

நடைபெற்ற துப்பாக்கிப்பிரயோகம் தனக்கானதே என்று நீதிபதி இளஞ்செழியன் கூறியிருந்தாலும் பொலிஸ் அத்தியட்சகர் அது நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட வில்லை என்று அடித்துச் சொல்லுகிறார். இதில் யார் கூறுவது நியம் என்பதை விசாரணைகளின் முடிவுகளிலேயே தங்கியுள்ளது. ஆனாலும் பொலிஸ் அத்தியட்சகர் கூறுவது பொய் என்றால் பொது மக்களுக்கு பொலிஸாரின் மீது இருக்கும் நம்பிக்கையும் இல்லாமல் போய்விடும். யாழ்ப்பாணத்தில் நடக்கும் குற்றங்களை நீதிபதிகள் பொலிஸாரின் விசாரணை அறிக்கைகளையும் சாட்சிகளையும் வைத்தே தீர்ப்புகள் வழங்குகின்றார்கள் என்பதால் தீர்ப்புக்கள் சரியானதா என்ற கேள்விகளையும் இந்த சம்பவம் உருவாகிவிடும்.

வாள்வெட்டுக் குழுக்கள் கூலிக்கு தாக்குவதிலும் கொலை செய்வதிலும் ஈடுபட்டபோதும் பொலிஸார் மீது எவ்விதமான தாக்குதல்களையும் நடத்தியிருக்கவில்லை. ஆனாலும் நல்லூர் சம்பவத்தின் பின்னர் கொக்குவில் பகுதியில் நீதி மன்ற அழைப்பாணையை வழங்கச் சென்ற இரண்டு பொலிஸார் வழிமறிக்கப்பட்டு சரமாறியாக வெட்டப்பட்டனர். அத்துடன் தென்மராட்சியில் படையினர் இருவர் மீதும் வாள்வெட்டுச் சம்பவம் நடந்தது. இந்த நிலையை தொடரவிட்டால் நேர்த்தியான ஆயுதப் பயிற்சியைப் பெற்றவர்கள் தமிழ் இளைஞர்கள். ஆயுதங்கள் இந்த இளைஞர்களின் கைகளுக்கு கிடைத்தால் வாள்களுடன் நடமாடும் தமிழ் தறுதலைகள் நாளை ஆயுதங்களுடன் படையினருக்குச் சவால் விடுக்கும் அளவுக்கு உருவாகிவிடுவர் என்ற அச்சம் தெற்கிற்கு வடபுலத்து தமிழ் அப்புக்காத்துமாரால் பக்குவமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் தான் இன்று குடாநாட்டின் தெருவெங்கும் படை இயந்திரங்கள் நடமாடுகின்றன. மக்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து படையினரை வெளியேற்றுவோம் என்றும். படையினரின் எண்ணிக்கை குறைப்புச் செய்வோம் என்றும் மூச்சடைக்க கத்தியவர்கள் இப்போது இராணுவத்தை தமது பாதுகாப்புக்கு தரும்படி கேட்கும் நிலைமைக்கு களமமைத்துக் கொடுத்துள்ளனர். குறித்த வன்முறைச் சம்பவங்களுக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருப்பதான ஒரு பிரமையை தென்னிலங்கைகு வடக்கு முதலமைச்சர் மற்றும் தமிழரசுக்கட்சியின் அப்புக்காத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் சுட்டிக்காட்டி முன்னாள் புலிகள் மீது தென்னிலங்கைக்கு அச்சத்தை விதைத்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த வஞ்சனைமிக்க செயற்பாட்டால் முன்னாள் புலி உறுப்பினர்களை மேலும் துன்பங்களை சுமக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் வாள்வெட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் அள்ளி அடைக்கப்பட்டுள்ளனர். இதை யோகத்தாரின் தறுதலைப் பொடியன் தான் அச்சுப்பிசகாமல் சொல்லிக்கொடுக்கின்றார் என சொல்லப்படுகிறது. ஆனாலும் கைதாகும் இளைஞர்களில் முன்னாள் புலி உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கியிருக்கவில்லை என்பது உண்மை.

அரசாங்கத்திற்கு இணக்க அரசியல் என்று சொல்லி சரணாகதி அரசியல் செய்து துதி பாடும் கூட்டமைப்பு புலிகள் மீது பழியை சுமத்தும் விதமாக பக்குவமாய் தென்னிலங்கைக்கு எடுத்துச் சொல்லி மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஒரு இயல்பற்ற நிலைமையை தோற்றுவித்து தமது அரசியல் இருப்பை இதனூடாக தக்கவைக்க முயற்சி செய்கிறது.இதனால் இன்று முன்னாள் புலிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

அரசியல் ஆட்டங்கண்டுவந்த தமிழரசுக் கட்சிக்கு தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கு தென்னிலங்கையின் அனுசரணை தேவைப்பட்டது. அதற்கு பலிக்கடாவாக துன்னாலை இளைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் அவர்கள் படையினரால் சின்னாபின்னமாக்கப்பட்டுவருகின்றனர். தென்னிலங்கையின் ஆசையான வடக்கின் படை இருப்பை சம்பந்தனும் சுமந்தினனும் துல்லியமாக உறுதிப்படுத்திக்கொடுத்துள்ளனர்.

ஆக அடுத்த தேர்தலுக்காக இன்றே களம் அமைத்து படையினரை கொண்டு யாழ்ப்பாணத்தை பதட்டமடைய செய்துள்ளனர். இதில் வெற்றியும் கண்டுள்ளனர். ஆனாலும் ஒன்றை சொல்லுகிறேன் தமிழர்கள் தொடர்ந்தும் அடிமைகளாக இருக்கமாட்டார்கள் என்று.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*