குடாநாட்டில் நிலவும் வறட்சி: 19 ஆயிரத்து 166 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவும் வறட்சி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 19 ஆயிரத்து 166 குடும்பங்களிற்கு உடன் நிவாரண உதவிகளிற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதோடு அவசரமாக மேலும் 5 நீர்த்தாங்கி பவுசர்களையும் கோரியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

தற்போது குடிநாட்டில் நிலவும் நிலமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவும் வரட்சி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 19 ஆயிரத்து 166 குடும்பங்களிற்கு உடன் நிவாரண உதவிகளிற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.

குடாநாட்டில் வேலணை, நெடுந்தீவு, நல்லூர், சாவகச்சேரி, மருதங்கேணி உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் வறட்சி கடுமையாகவுள்ளது.

இவ்வாறு வறட்சி நிலவும் பிரதேசங்களில் 19 ஆயிரத்து 166 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 13 ஆயிரத்து 586 குடும்பங்களிற்கு தற்போது குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு இடம்பெறும் படிகளிற்காக உடனடியாக மேலும் 5 நீர்த்தாங்கி பவுசர்களை அமைச்சிடம் கோரியுள்ளோம்.

இவ்வாறு விடுத்த கோரிக்கையினை ஆராய்ந்த அமைச்சும் இரண்டு நீர்த்தாங்கி பவுசர்களை வழங்க முன்வந்துள்ளனர்.

இதேநேரம் தீவுப் பகுதிகளில் நிலவும் வறட்சியை கட்டுப்படுத்துவதற்காக யாழ். நகரில் இருந்தும் குடிநீர் அனுப்பி வைக்கப்படுகின்றது என்றார்.

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*