துன்னாலையில் “இரவு நேரப் புலனாய்வு பிரிவுமீது” தாக்குதல்

துன்னாலை குடவத்தை மற்றும் கலிகை பகுதியில் போலிசார்மீதும் அதன்பின்னர் இராணுவத்தினர் மீதும் அதனைத் தொடர்ந்து விசேட அதிரடி படையினர் மீதும் அதற்கும் பின்னர் கடற்படையினர்மீதும் தாக்குதல் நடாத்தும் 96 பேருக்கும் இரவு நேர உளவுத்துறை வேலை செய்து வந்த தமிழ் இளைஞன் இனந்தெரியாதவர்களால் இரவு குடவத்தை பகுதியில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

முப்படையினர்மீதும் தாக்குதல் நடாத்தும் குழுவினர் தமது புலனாய்வு பிரிவு என்று ஒண்றை உருவாக்கி தாம் மணல் கடத்தி செல்லும்போது வாகனத்திற்கு முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் மோட்டார் சைக்கிளில் செல்வார்கள்.

தாம் மணல் கடத்தல் ஆரம்பிக்கும்போது தமது புலனாய்வு பிரிவு உறுப்பினர்களை வேவு பிரிவை நெல்லியடி போலிஸ் நிலையத்தின் வாசலிலும் பருத்தித்துறை போலிஸ் நிலையத்தின் வாசலிலும் நிறுத்துவார்கள்.

இரவு நேரத்தில் போலிசாரின் நடமாட்டம் உண்டா என்பதனை கவனிப்பதற்கும் இத்தகைய ஒரு நடைமுறை இருந்து வருகிறது.

குறித்த வேவு பிரிவை சேந்த ஒருவருக்கு இண்று இரவு சரமாரியாகத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

துன்னாலையில் “இரவு நேரப் புலனாய்வு பிரிவு photo”

துன்னாலையில் “இரவு நேரப் புலனாய்வு பிரிவு photo”

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*