மேசன் தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மேசன் தொழிலுக்குப் பயிற்சி பெற்றவர்கள் 400 பயிற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் இன்று (சனிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.

இவ் உபகரணங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். திருமறைக்கலாமன்றத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உட்பட வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர்கள், என பலர் கலந்து கொண்டனர்.

கடந்த மூன்று மாதங்களாக தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் சீடா மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை இணைந்து யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மேசன் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டன.

மூன்று மாத பயிற்சிகயினை நிறைவு செய்த 400 பேருக்கு மேசன் தொழில் மேற்கொள்வதற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

3 மாத பயிற்சியின் போது பயிற்சி பெற்றவர்களுக்கு சீருடைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவுகளுடன் மேசன் தொழில் மேற்கொள்வதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*