மின் விளக்குகள் பொருத்த வேண்டும்:நெடுந்தீவு மக்கள் கோரிக்கை

இரு­ளில் கிடக்­கும் நெடுந்­தீ­வுச் சாலை­க­ளில் மின்­வி­ளக்­குகளை பொருத்­தித் தரு­மாறு பிர­தேச மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

நெடுந்­தீ­வில் சுமார் ஆயி­ரத்து 500 க்கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் வாழ்ந்து வரு­கின்­றனர்.

பிர­தே­சத்­தின் ஒரு­சில பகு­தி­க­ளில் மட்­டும் சாலை மின் விளக்­கு­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. மக்­கள் அன்­றா­டம் பாவிக்­கும் பல சாலை­கள் இரு­ளில் மூழ்­கியே காணப்­ப­டு­கின்­றன.

பொது­வாக பெண்­கள், வயோ­தி­பர்­கள் இர­வு­வே­ளை­க­ளில் இருள் சூழ்ந்த சாலை­யால் பய­ணிக்­கும்­போது பல சவால்­களை எதிர்­கொள்­கின்­ற­னர்.சாலை­க­ளும் குண்­டும் குழி­யு­மாக இருக்­கின்­றன. இதனால் இரு­ளில் பய­ணிப்­ப­வர்­க­ளில் பெரும்­பா­லா­னோர் அதில் வீழ்ந்து காயப்­ப­டு­கின்­ற­னர். வாக­னங்­க­ளும் சேதா­ரம் அடை­கின்­றன.

எனவே, சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் இது­தொ­டர்­பில் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*