யாழ் நீதவான் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் ஓடிய வாத்திக்கு கூறியது என்ன?

குடிகார வாத்தியாரொருவர் நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட சம்பவம் இன்று யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

வலயக் கல்விப்பணிமனையொன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் மது அருந்தி விட்டு வந்து கொண்டிருந்தபோது கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அவரை கடுமையாக எச்சரித்த நீதிவான் சி.சதீஸ்தரன் சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே மது அருந்திவிட்டு இவ்வாறு நடந்து கொண்டால் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என எச்சரித்ததுடன் இனியொரு தடவை இவ்வாறு நடந்து கொண்டால் கற்பிக்கின்ற பாடசாலையிலேயே மாணவர்களுக்கு முன்னால் சமூக சேவையில் ஈடுபட வேண்டியேற்படும் என எச்சரித்தார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*