குற்றவாளிகளை பிடித்த அப்பாவிகள் மேல் வழக்குகள் ? – விடுதலை எப்போது ?

எல்லோரும் சுவிஸ் குமார் பற்றியும் வித்தியா பற்றியும் கதைக்கிறார்கள்.

சுவிஸ் குமாரை கைது செய்த சிந்தக பண்டாரவை இனி ஏன் விடுதலை செய்யக்கூடாது ?

முன்னால் வடமாகண மூத்த போலிஸ் அத்தியட்சகரால் வித்தியா கொலையில் இருந்து தப்புவதற்காக சிந்தக பண்டார மீது போலியான கொலை குற்றச்சாட்டு சுமத்தபட்டு சிறையில் அடைக்கபட்டார்.

வித்தியாவை கொலை செய்த சுவிஸ் குமாரை கைது செய்த சிந்தக பண்டாரவை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் ?

மாபெரும் கொடிய குற்றவாளியான சுவிஸ் குமார் இன்று குற்றவாளி என தீர்ப்பான பின் முன்பு அவரை கைது செய்த போலீசார் பின்பு விடுதலை செய்த போது நீதி பிழைத்த நீதிமன்றத்தின் மேல் ஏற்பட்ட ஆத்திரத்தில் தமிழ் இளைஞர்கள் நீதி மன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நீதி மன்றத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இது சட்டத்திற்கு முரணானது என்றாலும் அன்றைய சூழலில் தமது சொந்த சகோதரிகளுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்தால் எப்படி துடிப்பார்களோ அப்படி இளைஞர்கள் காவல்துறையினரின், தவறான நீதியின் மேல் கோபமுற்று அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இப்பொழுது அவர்கள் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

குற்றவாளிகளை காப்பாற்றியவர்கள் தண்டிக்கப்படவில்லை.

குற்றவாளிகளை தப்பிக்க விட்டமைக்கு தட்டி கேட்டவர்கள் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்?

வித்தியாவுக்கு நிகழ்ந்தது எம் வீட்டு பிள்ளைகளுக்கு நிகழ்ந்திருந்தால் எப்படி துடிப்போம் என அன்று நினைக்காமல் காவல் துறை விடுதலை செய்ததனால் உணர்வு கொண்டு கொதித்தெழுந்த இளைஞர்களின் உண்மையான சமூக அக்கறையை மதித்து அவர்கள் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

சமூக அக்கறை தவறா? சமூக அநீதியை வளர்ப்பது தவறா? இதை சிந்திக்க வக்கில்லையா நீதி துறைக்கு?

மக்கள் அப்பாவி இளைஞர்கள் மேல் அநியாயமாக சுமத்தப்பட்டிருக்கும் வழக்குக்கு எதிராக போராட வேண்டும்.

 

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*