சாவகச்சேரி வைத்தியசாலையில் நோயாளிக்கு சாராயம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு குளிர் பானத்துக்குள்  போதை தரும் மதுவினை கலந்துகொண்டு சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

நேற்றைய தினம் இரவு 7:30 மணியளவில் நோயாளியை பார்க்க சென்ற ஒருவர் மதுபானத்தை குளிர்பானத்துக்குள் கலந்து கொண்டு சென்ற நபரைவைத்தியசாலை காவலாளிகள் பரிசோதனை செய்தபோது மாதுபானம் கலந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து விரைந்து சென்ற பொலிசார் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*