சிறுவர் இல்லத்தில் சித்திரவதையா ? 6 மாணவர்கள் நிலை

கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்ல அதிகாரிகளினால் அந்த இல்லத்தில் வசித்து வந்த 6 மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவரின் தந்தை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

இன்று (06) காலை Jvp Web Media மற்றும் Tamil Win Media அலுவலகத்திற்கு தொலைபேசியூடாக அழைப்பினை மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையான யாழ்ப்பாணம் – கந்தர்மடத்தைச் சேர்ந்த பிறேம் குமார் இந்த விடயத்தை தெரிவித்தார்.

கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்தில் தனது மகனுடன் இணைந்து மேலும் 5 பேரை சிறுவர் இல்ல அதிகாதிகள் கடுமையாக தாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.கடந்த மாதம் 21 ஆம் திகதி மகாதேவா சிறுவர் இல்லத்தில் இருந்த குறித்த 6 பேரும் சிறுவர் இல்ல அதிகாரிகளின் அனுமதியின்றி இளநீர் குடித்தமையினால் அதிகாரிகள் தம்மை தாக்கியதாக மாணவர்கள் குறிப்பிட்டார்.

செப்டொம்பர் 21 ஆம் திகதிமுதல் தம்மை பாடசாலை அனுப்பாது சிறுவர் இல்லத்தில் தடுத்து வைத்து தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தெரிவித்தார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*