18 ஆண்டுகளாக ஊழல் பெருச்சாளி (கல்பனா) ஒரே அலுவலகத்தில் உள்ளார்

அரச சேவையில் இடமாற்றம் என்பது எதற்காக மேற்கொள்ளப் படுகிறது என்பதன் பொருளை உணர்தல் வேண்டும்.

(1) ஒரு அரச உத்தியோகத்தர் தொடர்ந்து ஒரே சேவை நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் இருப்பாராயின் பின்வரும் விடயங்கள் அவரது இடமாற்றம் தொடர்பாக கருத்தில்கொள்ளப்படும்.

(2) குறித்த அலுவலகத்தை பற்றி நன்கு பரீட்சயம் அவருக்கு ஏற்படுவதுடன் பலவிதமான முறைகேடுகளை / ஒழுங்கீனங்களை செய்ய ஏற்ற சூழல் அவருக்கு காணப்படும் அத்தோடு செய்யவும் உந்தப் படுவார்.

(3) குறித்த இடமாற்றம் பெறாத அலுவலர் சார்ந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேலதிகாரிகளால் மேற்கொள்வது கடினமாக இருக்கும்.

(4) ஒழுக்காற்று நடைமுறைகளின் தேவைகளை அவ்வாறான உத்தியோகத்தர் நிறைவு செய்ய மாட்டார்.

(5) அத்தோடு குறித்த உத்தியோகத்தர் அவர்சார்ந்த பதவிக்கான பரந்த அனுபவத்தை பெறுதற்கான சந்தர்ப்பம் ஒன்றை இழக்க நேரிடும்.

இவ்வாறு அரச உத்தியோகத்தர்களிற்க்கான தாபன விதிக் கோவையில் இடமாற்றத்தின் முக்கியத்துவம் தொடர்பாக மிகத் தெளிவாக கூறப்படுகிறது.

அத்தோடு இவ்வாறான இடமாற்றம் குறித்த உத்திகோகத்தருக்கு 18 வருடங்களுக்கு மேல் வழங்காமல் இருப்பது காலங்காலமாக குறித்த அலுவலகத்திற்கு (மாகாணத்தில் சிறந்த அரச நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது என கூறும் அலுவலகத்தில்) பதவிக்கு வரும் அரச அதிகாரிகள்(செயலாளர்கள்) எவ்வாறு அரச சேவையை துஸ்பிரயோகம் செய்துள்ளனர் என்பது புலப்படுகிறது.

ஒரு நேர்மையான அலுவலருக்கு பதிலான பிறிதோர் அலுவலரை இடமாற்றத்தினால் பிரதியீடு செய்வது சுலபம் ஆனால் கால காலமாக தனது விருப்பத்தின் பேராலும் மேலதிகாரிகளின் ஆணைப்படியும் ஊழல் செய்துவந்த ஒரு உத்தியோகத்தருக்கு (கல்பனா) பதிலான இடமாற்றலாகி வரும் பிறிதொரு அலுவலரிடம் குறித்த உத்தியோகத்தரின் பணிகளை வழங்குவதே மிகவும் கடினமான சவாலான விடயம் ஆதனால் தான் 18 ஆண்டுகளாக குறித்த ஊழல் பெருச்சாளி(கல்பனா) ஒரே அலுவலகத்தில் உள்ளார்.

குற்றம் செய்பவர்களைக்காட்டிலும் குற்றம் செய்வதற்கு பாத்திரமாக உள்ள அரச அதிகாரிகளும்(செயலாளர்) தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

இவ்வாறாக இங்கு பிரசுரமான செய்தியில் பல தர்க்க ரீதியான நியாயப்பாடுகளும் அரச அலுவலர்களுக்கான ஒழுக்க கோவையை அனுசரிக்கும் வகைளில் பல உண்மைகள் காணப்படுவது விவரம் அறிந்த யாவருக்கம் வெளிப்படையாகும்.

ஆனால் குற்றம் செய்பவன் அவமானப்படுவதால் திருந்துவதற்கான வாய்ப்பு உண்டு , அத்தோடு காலத்தின் தேவையாகும் எனும் நியாயப்பாட்டுடனும் இங்கு வழங்கப்பட்டுள்ள சில விடயங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான துணிகர செய்தித்தளங்கள் நல்லாட்சி அரசின் தேவைப்டபாடாகும்.

இந்த செய்தியில்கணிசமான உண்மை இருப்பது அனேகமான அரச உத்தியோகத்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

வடக்கு பொது நிர்வாக செயலகத்தில் கோலோச்சும் ஜான்சிராணி (ஊழல் ராணி)

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*