நெடுந்தீவு வீதியில் விமான தாக்குதல் ? – அதிகாரிகள் தப்பி ஓட்டம் ?

நெடுந்தீவு பிரதான வீதியில் உருவானது பள்ளம் அதிகாரிகள் அசமந்தம்.

நெடுத்தீவு பிரதான வீதியின் நடுவில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதுடன் கடந்த 4 நாட்களாக எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு அருகாமையிலேயே பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கத்தொரு விடயமாகும். நெடுந்தீவு வீதிகளுக்கு என நிதி ஒத்துக்கப்படடமை தொடர்பாக வெளிவந்த பத்திரிகை செய்திகள் தொடர்பான சந்தேகங்களும் வெகுவாக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறித்த வீதியினை செப்பனிட்டு மக்களின் போக்குவரத்து சிக்கலை நீக்குமாறு குறித்த அதிகாரிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.

வீதி அபிவிருத்திகளும் வேலைவாய்ப்புகளும் பெற்றுக்கொடுப்பது அரசியல்வாதிகளின் தொழில் அல்ல.

பாராளுமண்ற உறுப்பினர்களின் கடமை. பாராளுமண்ற உறுப்பினர்கள் அரச அதிகாரிகளின் தவறுகளுக்கு பொறுப்பாளிகளாக முடியாது.

இந்த வீதியை திருத்த வேண்டியது வடமாகாண சபையும் , பிரதேச சபையும் , வீதி அபிவிருத்தி அதிகார சபையுமே தவிர மத்திய அரசின் அமைச்சர்கள் இல்லை.  மக்களுக்கு உள்ள குறைகளை மத்திய அரசின்  பாராளுமண்றத்தில்  சுட்டிக்காட்டுவதே அமைச்சர்களின் கடமை. 

ஆகவே அரச அதிகாரிகள் தமது தொழிலை சரிவர செய்யவேண்டும்.

பட உதவி எமது புலனாய்வு செய்திப்பிரிவு

பட உதவி எமது புலனாய்வு செய்திப்பிரிவு

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*