யாழ் நூலகத்தை எரித்த சூத்திரதாரி யார்…?

1981 மே 31 நள்லிரவு யாழ் நூலகம் எரித்தழிக்கப்பட்டது. இந்த தமிழினத்தின் வரலாற்றுப் பண்பாட்டு  அறிவப் பொக்கிஷ படுகொலையின் சூத்திரதாரி  யார் என்று நிண்டகாலம் மறைக்கப்பட்ட வந்த உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது.

தற்பபோது மானத்தமிழன் தானே என்று மார் தட்டி பேசும் சப்ரா எம்.பியின் தந்தை ஈஸ்வரபாதம் ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகால உறுப்பினர். சிங்கள அரசு என்று இன்று சரவணபவான் கூறி வரும் அதே அரசின் சேவகனாக தொழில் புரிந்து வந்த ஓரு போலிஸ் அதிகாரிதான் இவரது தந்தை ஈஸ்வரபாதம்.

யாழ் கொக்குவில் சம்பியன் வீதியில் இருந்தது சரவணபவானின் வீடு. 1981 மே 31 மாலை வேளை சரவணபாவின் கொக்குவில் வீட்டு ஒரே கூத்தும் கும்மாளமுமாக காணப்பட்டது. அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் காமின திசநாயக்கா தலைமையில் தென்னி லங்கையில் இருந்து வந்த காடையர் கூட்டம் அந்த வீட்டு முற்றத்தில் குடி போதையில் கூத்தடித்துக் கொண்டிருந்தனர்.

சரவணபாவானுக்கு அப்போது 28.  வாலிப வயது. தந்தை ஈஸ்வரபாதத்துடன் இணைந்து மது போத்தல் உடைத்து காடையர்களுக்கு விருந்து பரிமாறினார் சரவணபாவான். தென்னிலங்கையில் இருந்து வந்த காடையர்களுக்கு நிறை வெறி ஏறி கூத்தும் கும்மாளுமாய் சரவணபாவனின் வீடு அல்லோல கல்லோலமானது. யாழ் நூலகத்தை எப்படி.. எத்தனை மணிக்கு… எரித்தழிப்பது என்று சரவணபவானின் கொக்குவில் வீட்டில்தான் திட்டங்கள் தீட்டப்பட்டது என தற்பொது பரவலாக சொல்லப்படுகின்றது.

அப்போது யாழ் துரையப்பா விளையாட்டரங்கின் அருகில் இருந்தது ஓரு தங்கு விடுதி. அதன் அருகேதான் யாழ் நூலகமும் உள்ளது. சரவணபாவனின் கொக்குவில் வீட்டில் இருந்து கும்மாளம் அடித்த தென்னிலங்கை காடையர்களும் அமைச்சர் காமினி திசநாயக்காவும் துரையப்பா விளையாட்டரங்கின் அருகில் இருந்த தங்கு விடுதியில் இரவோடிரவாக கொண்டு வந்து இறக்கப்பட்டனர்.

அங்கு அமைச்சர் காமினிக்கும்  காடையர் கூட்டத்திற்கும் சரவணபவானின் தந்தை விசுவாமிக்க பொலிஸ் அதிகாரியாக இருந்து காவல் காத்து நின்றார். நள்ளிரவு வேளை தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் நூலகம் எரியத்தொடங்கியது. நூலகத்தை எரித்துவிட்டு வெற்றிப் புன்னகையோடு வந்த காடையர்களுக்கு சரவாணபவானின் தந்தை ஈஸ்வரபாதம் உற்சாகம் பானம் கொடுத்து வரவேற்றார்.

இன்று தமிழ் தேசியம் பேசி திரியும் வரவணபவான் அவர்களும் 28 வயது வாலிப மிடுக்கில் அங்கே புன்னகைத்து நின்ற காட்சிகளை கண்டவர்கள் ஆதாரத்துடன் இன்றும் கூறுகின்றார்கள். தெற்காசியாவின் சிறந்த நூலகம் என போற்றப்பட்ட யாழ் நுலகத்தை எரிக்கும் நயவஞ்சக திட்டத்தை தீட்ட இடம் கொடுத்து விட்டு சரவணபாவின் வீடு எதுவும் அறியாதது போல் அமைதியாக இருந்தது.

தமிழ் பேசும் மக்களின் அறிவுக்களஞ்சியத்தை அழித்தொழித்து அங்கிருந்த தொண்ணூற்றேழாயிரம் நூல்களை எரித்தழித்த பெருந்துயருக்கு துணை போன தமிழின துரோகிகளான பொலிஸ் அதிகாரி ஈஸ்வரபாதமும் அவர் மைந்தன் சரவணபானும் அதை பார்த்து ரசித்து சல்லாபமிட்டனர். இதுதான் உண்மை இதை மறைத்த தனது பத்திரியையிலேயே சரவணபவன் நூலக எரிப்பை செய்தியாக்கி வியாபாரம் செய்து வந்தமை பிந்திய வரலாறு.

மறு நாள் விடிந்ததும் யாழ் நூலகம் எரிக்கபட்ட செய்தி அறிந்து மொழியியல் பேரறிஞர் வண பிதா டேவிற் அடிகளார் அவர்கள் மாரடைப்பால் துடி துடித்து மரணமடைந்தார். தமிழ் நாட்டின் புகழ் பூத்த எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் ஒரு இலட்சம் புத்தகங்கள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதி தனது கவலையை வெளிப்படுத்தினார். பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் யாழ் நுலாக எரிப்பு குறித்த கருத்தை மொழி பெயர்த்து ஆங்கில கவிஞன் ஒருவனே தனது துயரத்தை வெளிப்படுத்தினான்.

“நேற்று என் கனவில் புத்த பெருமான் சுடப்பட்டு இறந்தார். சிவில் உடை அணிந்த அரச காவலர்கள் அவரை கொன்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது”.

இப்படி தனது துயரத்தை கவிதையில் வடித்தார் போராசிரியர் நுகுமான். சிவில் உடை அணிந்த அரச காவலர்கள் என்று போராசிரியர் நுகுமான் கூறியது சரவணபாவின் தந்தை ஈஸ்வரபாதத்தையும் சேர்த்தே என்றுதான் எண்ண தோன்றுகிறது.

இன்று தேசியம் பேசி தமிழ் மக்களை விலைபேசி விற்பது  சரவணபவனுக்க புதியதொன்றல்ல. எமது இனத்தின் அரும் பெரும் பொக்கிசமாம் யாழ் நுலகத்தை எரித்தழிக்க துணை போன சரவணபவனை யாரிடம் மன்னிப்பு கேட்டாலும் வரலாறு அவரை ஒரு போதும் மன்னிக்காது. இததகையவர்களை தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டதுதான் தமிழ் மக்கள் செய்த சாபக்கேடுமாகும்

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*