யாழில் குடும்பமே தற்கொலை செய்ய காரணமானவர்களின் புகைப்படங்கள்..!!

சுனேத்திரா குடும்பம் அவர்களின் தற்கொலைக்குக் காரணமான ஏமாற்று மோசடிக்காரர்களும்…

காசை தராவிட்டால் நாங்கள் தற்கொலை செய்வோம் என்று கூறியபோது “நீங்கள் செத்தால்தான் நிம்மதி” என ஏமாற்றியவரின் மனைவி கூறியதாக தெரிவிக்கப் படுகின்றது.

பெருந்தொகை பணத்தை நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்த நிலையில், அதனால் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக தற்கொலை செய்த பெண்ணின் கணவன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தற்கொலை செய்துள்ளார்.

ஒரு கோடி 17 லட்சம் ரூபாய் பணத்தை நெருக்கமான நண்பருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்து விட்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர். எனினும், கணவர் மாத்திரம் முதலில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

கணவர் தற்கொலைக்கு முயற்சித்து போது அனுபவித்த துன்பத்தை கண்ட மனைவி அவரை காப்பாற்றுவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

எனினும் இறுதியில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்த வந்த மனைவியினால் கடன் சுமை மற்றும் பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இவர்களிடம் பணம் பெற்று கொண்ட நபர் பணத்தை திருப்பி செலுத்தாமல் இரகசியமாக சுவிஸ் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

6 மாதங்களின் பின்னர் பணம் கேட்ட சென்ற போது பணத்தை வழங்கியதற்கு என்ன ஆதாரம் உள்ளதென சுவிஸ் சென்றவரின் மனைவி கேட்டுள்ளார்.

இதனால் தொடர் அதிர்ச்சி மற்றும் கடன் சுமையை தாங்கி கொள்ள முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய தாயாரான சுநேத்திரா மற்றும் கர்சா, சஜித், சரவணா ஆகிய பிள்ளைகளே தற்கொலை செய்துள்ளனர்.

       

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. This is terrible. I find it so upsetting. I hope the culprits will be caught and stand trial. I have no doubt as requested by late Sunetra, Judge will hand down a severe punishment.

  2. குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகள் தான் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன.
    குற்றவாளிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*