யாழ்ப்பாண வர்த்தகரின் வயித்தில் அடி

எங்கிருந்தோ யாழ்ப்பாணத் தெருவோரங்களில் நடைபாதை வியாபாரம் செய்வோரால் யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்கள் திண்டாட்ட படுகின்றனர்.

குறிப்பாக சுன்னாகம் நகரப் பகுதியில் உள்ள புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைக்காரர்கள் பெருந்தொகையான பணத்தினை முதலீட்டு, கடைக்கும் வாடகை பணத்தை கொடுத்து, முன்பணமாக பல இலட்சம் ரூபா கொடுத்து கடைகளை நடத்தி வருகின்றனர்.

ஆனால் பண்டிகை காலத்தில் மட்டும் எங்கிருந்து முளைத்து கொள்கின்றனர் நடைபாதை வியாபாரிகள் இவர்களால் பல வியாபாரிகள் இன்று தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

உண்மையில் நகர் பகுதியில் வாழ்கின்ற பெருந்தொகையான மக்களின் அன்றாட வாழ்வியலுக்குரிய ஆதாரமாக புடவை வியாபாரம் , இது அவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்ற ஒரு வியாபரம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக அவர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள முடியாது இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டு உள்ளார்.

எனது சிறுவயது முதல் நன்கு அறியப்பட்ட இந்த தொழிலாளிகள் பலரும் இன்று தங்கள் தொழிலை கைவிட்டு மிகுந்த கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் சுன்னாகம் நகர் வர்தகர் சங்கம் என்ற ஒன்று பெயரளவில் மட்டுமே உள்ளது.

அதிலே தலைவர் செயலாளர் போன்றோர் பதவிக்கு மட்டுமே உள்ளார் எந்தவித நடவடிக்கையும் இதற்கு எடுக்க மாட்டார்கள், மேலும் பெரிய முதலாளிகளுக்கு இதன் பாதிப்பு குறைவு ஆனால் சந்தையில் உட்புறத்தே பண்டிகை காலத்திற்காக முதல் போட்டுவிட்டு வியாபாரம் சரியாக போகாத காரணத்தினால் கடனாகி கஷ்டப்படுகின்ற சிறிய வியாபாரிகளுக்கு இதன் அருமை புரியும்.

தயவுசெய்து வலி தெற்கு பிரதேச சபை செயலாளர் அவர்களும் சுன்னாகம் நகர் வர்த்தக சங்கத்தினரும் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

தயவுசெய்து இனிவரும் பண்டிகை காலங்களில் இவ்வாறான வர்த்தகர்கள் வயிற்றில் அடிக்கும் நடவடிக்கைகளை தடைசெய்து ஏனைய நகர்ப்புறங்களில் உள்ள பிரதேச சபைகள் எவ்வாறு நடைபாதை வியாபாரிகளை கட்டுப்படுத்தி வர்த்தகர்களின் நலன்களைக் காத்துக் கொள்ளுகின்றர்களோ,  அதேபோன்று இந்த பிரதேச சபையும் தொழிற்பட வேண்டுமென்று ஆதங்கத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் அன்பார்ந்த பெரும் முதலாளிமார்களே கணப்பொழுது சிந்தியுங்கள் , இந்த சிறிய வியாபாரிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது .

ஆகவே இனி வரும் காலங்களில் சரியான பொது வர்த்தக சங்கத்தினை இயக்கி அதனூடே ஒற்றுமையின் பலத்தை வெளிப்படுத்தி வியாபாரிகள் கடன்காரர் ஆவதும் தற்கொலை செய்வதையும் தடுப்பதற்கு முயற்சிப்போம்.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*