கடற்கரைகளில் ஒன்றான கசூரினா கடற்கரை

யாழ்மாவட்டத்தில் உள்ள சுற்றுலா கடற்கரைகளில் ஓரளவேனும் சுற்றமாக பராமரிக்கப்படும் கடற்கரைகளில் ஒன்றான கசூரினா கடற்கரை.

கரையிலிருந்து கிட்டத்தட்ட 500 மீட்டர் தூரம் வரைக்கும் நடந்துசெல்லக்கூடிய அளவே கடல் ஆழமாக உள்ளதால் சிறுவர் முதல் பெண்கள் வரை அனைவரும் நீந்தி குளித்து மகிழக்கூடிய கடற்கரையாக இது உள்ளதோடு அலைகளற்ற கடற்கரையாகவும் உள்ளது சிறப்பு.

கடற்கரைப்பிரதேசத்துக்கு செல்ல சிறு கட்டணம் அறவிடப்படுகிறது. அத்தோடு உடைமாற்ற ஆண்கள் பெண்களுக்கென தனி தனி இடங்கள் உள்ளன. அத்தோடு கடலில் குளித்த பின்னர் நல்ல நீரில் குளிக்கவும் கட்டண குளியலறைகள் உள்ளன. கடைகளும் உள்ளன, அத்தோடு குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக தனி தனி கொட்டில்களும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே குப்பை வாளிகள் வைக்கப்பட்டிருந்தது காரணமாக குப்பைகள் அவ்வளவாக காணக்கூடியதாத இருக்கவில்லை. கட்டணம் செலுத்தி படகுப்பயணமும் செய்ய முடியும், பாதுகாப்பான படகு பயணத்துக்கு தேவையான மிதவை ஆடைகளும் (Life jackets) பயணிக்கும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது .

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*